அர்ஜூனா விருதுக்கு பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

நாட்டின் மிக சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை இந்த வருடம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வழங்குமாறு  அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை பல்வேறு விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து வருகின்றன.

அந்த வகையில், தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயரை அர்ஜூனா விருதுக்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் முன்னதாக உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com