ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டியை 4 - 4 என்ற கோல் கணக்கில் செல்சியா டிரா செய்தது. இதற்கிடையில், நவம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை ஆன்ஃபீல்டில் லிவர்பூல் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ப்ரென்ட்ஃபோர்டு அணியை வீழ்த்தியது.
லண்டனில் நடைபெற்ற பிரீமியர் லீக் மோதலில் பெப் கார்டியோலாவுக்கு எதிரான போட்டியில் செல்சியா மூன்று முறை மீண்டு எழுந்தது. சமீபத்தில் பிரீமியர் லீக்கில் உள்ளூர் போட்டியாளர்களான டோட்டன்ஹாமை 4 - 1 என்ற கணக்கில் செல்சியா தோற்கடித்தது.
ஆட்டம் தொடங்கிய 25வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் எர்லிங் ஹாலண்ட் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் போட்டார். எனினும், செல்சியா அணி அதிரடி திருப்பமாக 2 கோல்கள் போட்டு 2 - 1 என முன்னிலை பெற்றது. செல்சியா அணியில் தியாகோ சில்வா மற்றும் ரஹீம் ஸ்டெர்லிங் கோல் போட்டனர். பின்னர் மான்செஸ்டர் அணியின் மானுவல் அகன்ஜி ஒரு கோல்போட்டு சமன் செய்தார். இடைவேளையின் போது இரு அணிகளும் 2 - 2 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் எர்லிங் ஹாலண்ட் 47வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். எனினும் செல்சியா அணியின் நிக்கோலாஸ் ஜாக்ஸன் பதிலுக்கு ஒரு கோல் போட்டார் (3 - 3).
மான்செஸ்டர் அணியின் ரோட்ரி 86வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் போட்டார். இந்த நிலையில் 4 - 4 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், ஆட்டம் முடிவடைய இருந்த நிலையில் செல்சியா அணியின் ஆர்மாண்டோ ப்ரோஜா ஒரு கோல் போட்டு அதை சமன் செய்தார். இறுதியில் ஆட்டம் 4 - 4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூர் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரென்ட்போர்டு அணியை வென்றது. ஆட்டம் தொடங்கிய 39வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முகமது சலா ஒரு கோல் போட்டார். டிரென்ட் அலெக்சாண்டர் தட்டிக்கொடுத்த பந்தை ஆர்னால்டு பெற்று அதை நியூனெஸிடம் அனுப்பினார், அதை அவர் சலாவுக்கு எடுத்துக் கொடுக்க சலா கோல் போட்டார்.
பின்னர் மீண்டும் 62வது நிமிடத்தில் சலாவுக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து லிவர்பூல் 2 - 0 என முன்னிலை பெற்றது. பின்னர் 74வது நிமிடத்தில் தியாகோ ஜோடா அடித்த பந்து கோல்கீப்பர் மார்க் பிளெக்கனைத் தாண்டிச் சென்று கோலுக்குள் புகுந்தது (3 - 0). சலா 200வது கோல் அடித்து சாதனை படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணி 27 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.