தொடர் தோல்விகளை சந்தித்துவரும் பி.வி.சிந்து!

P.V.Sindhu
P.V.Sindhu

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நோஸோமி ஒகுஹாரேவிடம் 14-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த போட்டி ஒருமணி நேரத்துக்கும் குறைவான நேரத்திலேயே முடிவடைந்தது.

ஜப்பான் வீராங்கனை நோஸோமி ஒகுஹாரியை இதுவரை 19 முறை எதிர்கொண்டுள்ள சிந்து, 9-வது முறையாக தோல்விகண்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்துவை வெற்றிகண்டு நோஸோமி பட்டம் வென்றார். அதன் பிறகு காயம் காரணமாக சரியாக விளையாடாத அவர், இப்போட்டியின் இரண்டாவது சுற்றில் சிந்துவை வீழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் சிந்து முதல் ஆட்டத்திலேயே ஜப்பான் வீராங்கனையிடம் தோற்றுப்போனார். உலகின் 15ஆம் நிலை ஆட்டக்காரரான அவர், நேரடியாக இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தார். உலகின் 36-ம் நிலை ஆட்டக்காரரான ஓகுஹாரா முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றில் சிந்துவை எதிர்கொண்டார். சிந்து செய்த பல தவறுகள் ஒகுஹாராவுக்கு சாதமாக முடிந்தது. 2019 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒகுஹாராவை வீழ்த்தி சிந்து சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த குஹாரா பெற்றுள்ள மூன்றாவது வெற்றியாகும் இது. இரண்டாவது சுற்றில் சிந்துவை வீழ்த்தியதன் மூலம் அவர் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்.

சிந்து வழக்கமான தாக்குதல் ஆட்டத்தை நடத்தவில்லை. அவரின் ஆட்டத்தில் துடிப்பு இல்லை. இந்த ஆண்டு அவர் பங்கேற்ற பெரும்பாலான ஆட்டங்களில் அவர் சோபிக்கவில்லை. இரண்டாவது சுற்றிலேயே சிந்து வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அவர் காயமடைந்து சிறிது ஓய்விலிருந்தார். பின்னர் மீண்டும் களத்தில் இறங்கியபோதிலும் அவர் தொடர் சரிவையே சந்தித்து வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com