வீழ்ந்த சாம்ராஜ்யம் - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஏற்றமும் இறக்கமும்..!!

West Indies Cricket Team
West Indies Cricket Team
Published on

ஒரு காலத்தில் கிரிக்கெட் மைதானத்திற்குள் அந்த ஜெர்சியைப் பார்த்தாலே எதிரணி வீரர்களுக்கு காய்ச்சல் வந்துவிடும். அவர்கள் வெறும் விளையாட்டு வீரர்கள் அல்ல, களத்தில் இறங்கினால் வெற்றிக்கனியைப் பறிக்காமல் திரும்பாத வேட்டைக்காரர்கள். 

ஆனால் இன்று? தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கூட வெற்றி பெற முடியாமல் திணறும் ஒரு அணியாக அவர்கள் மாறிவிட்டனர். 1970கள் மற்றும் 80களில் கிரிக்கெட் உலகையே தனது காலடியில் வைத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அசுர வளர்ச்சியையும், தற்போதைய பரிதாபகரமான வீழ்ச்சியையும் பற்றி கொஞ்சம் அலசலாம் வாங்க.

வரலாறு!

வெஸ்ட் இண்டீஸ் என்பது ஒரு தனி நாடு கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த கரீபியன் கடற்பகுதியில் உள்ள சுமார் 15 தீவுகளின் கூட்டமைப்பு தான் இந்த வெஸ்ட் இண்டீஸ். ஜமைக்கா, பார்படாஸ், ட்ரினிடாட் என வெவ்வேறு கலாச்சாரம் கொண்ட மக்கள், கிரிக்கெட் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தனர். 1926-ல் இதற்கான கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டு, 1928-ல் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினர். 

ஆரம்பக்காலங்களில் வெள்ளை இனத்தவர்களே கேப்டன்களாக இருந்த நிலையில், ஃப்ராங்க் வாரல் (Frank Worrell) எனும் முதல் கருப்பின கேப்டன் பொறுப்பேற்ற பிறகுதான் அந்த அணியின் ஆன்மாவே மாறியது. அடிமைத்தனத்திற்கு எதிரான ஒரு குறியீடாக அந்த அணி உருவெடுத்தது.

சிறந்த வீரர்களின் சாம்ராஜ்யம்!

1970களில் கிளைவ் லாயிட் (Clive Lloyd) கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு சரித்திரம் மாற்றி எழுதப்பட்டது. தனித்தனி தீவுகளாக சிதறிக் கிடந்த வீரர்களை ஒரு வலிமையான படையாக அவர் மாற்றினார். அதன் விளைவு, 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடந்த முதல் இரண்டு உலகக் கோப்பைகளையும் வென்று உலகையே மிரள வைத்தார்கள். 

கிளைவ் லாயிட் அமைத்து கொடுத்த அந்தப் பாதையில், விவ் ரிச்சர்ட்ஸ் (Viv Richards) எனும் சிங்கம் கர்ஜிக்கத் தொடங்கியது. தலையில் ஹெல்மெட் அணியாமல், வாயில் சூயிங்கம் மென்றுகொண்டே ஃபாஸ்ட் பவுலர்களைத் துவம்சம் செய்யும் அவரது ஸ்டைலைக் கண்டு உலகமே உறைந்து போனது. 'பிளாக்வாஷ்' (Blackwash) என்ற பெயரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து துவம்சம் செய்த கதையெல்லாம் இன்றும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

இதையும் படியுங்கள்:
மரண வேகம்; துல்லியமான குறி! 'பையாத்லான்' வீரர்களின் சவால்!
West Indies Cricket Team

மரண பயம் காட்டிய வேகப்பந்து வீச்சு!

பேட்டிங் ஒருபக்கம் என்றால், பந்துவீச்சு அதைவிடக் கொடூரம். ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர் மற்றும் மால்கம் மார்ஷல். இந்த நால்வர் கூட்டணிக்கு "நான்கு குதிரை வீரர்கள்" (Four Horsemen) என்று செல்லப் பெயர் உண்டு. இவர்கள் பந்து வீச ஓடி வந்தாலே பேட்ஸ்மேன்களின் கால்கள் நடுங்கும். வேகம், பவுன்சர் மற்றும் துல்லியம் என எதிரணிகளை மைதானத்திற்குள் நுழையவே பயப்பட வைத்தனர். 1980 முதல் 1995 வரை, அதாவது சுமார் 15 ஆண்டுகள் எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் தோற்காத ஒரு அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை அவர்கள் கட்டி ஆண்டனர்.

வீழ்ச்சி!

காலம் மாறியது. நிர்வாகச் சீர்கேடுகள், வீரர்களுக்கும் வாரியத்திற்கும் இடையிலான ஊதியப் பிரச்சனைகள் மற்றும் டி20 லீக் போட்டிகளின் ஆதிக்கம் போன்றவை அந்தப் பொற்கால இருளைக் கவ்விக்கொண்டன. லாரா, சந்தர்பால் போன்ற ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்ப ஆளில்லை. 

ஒரு காலத்தில் உலகக் கோப்பை என்றாலே அது வெஸ்ட் இண்டீஸுக்குத்தான் என்று இருந்த நிலை மாறி, இன்று உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்கே அவர்கள் போராட வேண்டியுள்ளது. பணம் மற்றும் அரசியலால் ஒரு மகத்தான கிரிக்கெட் கலாச்சாரம் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிறிய தொகை ஒரு பெரிய காராக மாறும் மேஜிக்! இளைஞர்களே கவனியுங்க...
West Indies Cricket Team

எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமாக இரகால மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளாவிட்டாலும், ஒற்றுமை இல்லாவிட்டாலும் அது சரிந்துவிடும் என்பதற்கு இதுவே சாட்சி. இன்று அவர்கள் தோற்கலாம், ஆனால் 70களிலும் 80களிலும் அவர்கள் விதைத்த அந்த ஆக்ரோஷமான கிரிக்கெட் விதைதான் இன்றைய நவீன கிரிக்கெட்டின் அஸ்திவாரம். 

அந்த 'கரீபியன் இசை' மீண்டும் மைதானங்களில் ஒலிக்க வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் வேண்டுதல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com