Ranji Trophy: 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி.. 36 வருடக் கனவு நிறைவேறுமா?

Tamilnadu team
Tamilnadu team

கடந்த 23ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற சௌராஷ்டிரா மற்றும் தமிழக அணிகள் விளையாடிய  ரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழக அணி வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2016 – 17 ம் ஆண்டிற்குப் பிறகு தமிழக அணி நாக் அவுட்டிற்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி கடந்த 23ம் தேதி முதல் மூன்று நாட்களாக சௌராஷ்டிரா அணியுடன் விளையாடியது. சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது.

தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். அதேபோல் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் சாய் கிஷோரும் பூபதி குமாரும் அரை சதங்கள் அடித்து அசத்தினர். இதனால் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி, அதிலும் சொதப்பவே செய்தது. புஜாரா மட்டும்தான் 170 பந்துகள் வரை விளையாடினார். ஆனால் சாய் கிஷோரால் தோற்கடிக்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்ஸிலும் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த நிலையில் தமிழக அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியைத்  வீழ்த்தியது. இதனால் தமிழக அணி உற்சாகத்தோடு அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் லீக் சுற்றில் தமிழக அணி ரயில்வேஸ், சண்டிகர், கோவா, பஞ்சாப் ஆகிய அணிகளை வீழ்த்தி முன்னேறியது. அதேபோல் கர்நாடகா அணி மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிராக விளையாடி ட்ரா செய்தது. குஜராத் அணிக்கு எதிராக மட்டும்தான் தமிழக அணியால் வெற்றிபெற முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து அணியை திக்குமுக்காடச் செய்த இந்திய வீரர்!
Tamilnadu team

இப்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது, நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதியானது. தமிழக அணி விஜய் ஹசாரே, சையத் முஷ்தக் ஆகிய தொடர்களில் எளிதாகச் சாதித்துவிடும். ஆனால் ரஞ்சி கோப்பையில் அப்படியில்லை. தமிழக அணி 1954 மற்றும் 1987 முதல் 88 வரை நடந்த இரண்டு ரஞ்சி ட்ராபி போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதன்பின்னர் 36 ஆண்டுக்காலமாக தமிழக அணி ரஞ்சியில் வெற்றிபெறவில்லை. இதனையடுத்து சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி அந்த நீண்டகால ஏக்கத்தை நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com