டி-20 தரவரிசையில் ரவி பிஷ்னோய் முதலிடம்!

Ravi Bishnoi tops the T20 rankings.
Ravi Bishnoi tops the T20 rankings.

ஐ.சி.சி.யின் டி-20 தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்தியாவின் ரவி பிஷ்னோய் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா டி-20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அவர் இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளார். அந்த தொடரில் அவர் 5 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை சாய்த்து, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அதனடிப்படையில் தற்போது டி-20 பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் 5 இடங்கள் ஏற்றம் கண்டு 699 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இலங்கையில் வனிந்து ஹசரங்கா, இங்கிலாந்தின் ஆதில் ரஷீத் இருவரும் 679 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். முதல் 10 இடங்களில் வேறு இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. அக்ஸர் படேல் 9 இடங்கள் முன்னேறி 18 வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மென்கள் பிரிவில் ருதுராஜ் கெய்க்வேட் 1 இடம் சறுக்கி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஐ.சி.சி.யின் தரவரிசை பட்டியலில் 8 பிரிவுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. டி-20, ஒருநாள், டெஸ்ட் என 3 பிரிவுகளிலுமே அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இது தவிர டி-20 பேட்ஸ்மென்கள் தர வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் தரவரிசையில் ஷுப்மன் கில் முதலிடத்தில் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின், டி-20 பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் ரவி பிஷ்னோய் முதலிடத்தில் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர் பிரிவில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com