‘இதற்கு நான் வீட்டிலேயே இருக்கலாம்’- முதன்முறை ஓய்வு குறித்து மனம்திறந்த அஸ்வின்..!

வெளிநாட்டுத் தொடர்களில் தனக்கு நடந்த ஒரு மோசமான விஷயத்தை சுட்டிக் காட்டி அதுதான் தனது ஓய்வு முடிவுக்கு காரணம் என அஸ்வின், வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
Rahul Dravid, ashwin
Rahul Dravid, ashwin
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்தாண்டு டிசம்பரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போட்டியின் போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததில் இருந்து அவரது 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவர் ஓய்வை அறிவித்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்தியாவுக்காக 287க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள 38 வயதான அஸ்வின், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பல சாதனைகளை படைத்துள்ளார். சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 765 விக்கெட்களையும், டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேனாக ஆறு சதங்களையும், 3503 ரன்களையும் எடுத்துள்ளார். மிக அதிக வயதில் ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, ஐந்து விக்கெட்களை வீழ்த்திய ஆல் ரவுண்டர் என்ற சாதனையை மூன்று முறை செய்துள்ளார். இதை செய்த முதல் இந்திய வீரரும் அவர்தான். இந்திய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய சாதனையை இதுவரை 37 முறை செய்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
அஸ்வின் ஓய்வு: மனைவி ப்ரீத்தியின் நெகிழ்ச்சியான பதிவு... வைரல்!
Rahul Dravid, ashwin

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தார். இந்நிலையில் குட்டி ஸ்டோரீஸ் என்ற பெயரில் அஸ்வின் வெளியிட்டுவரும் யூடியூப் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அஸ்வின், தனது ஓய்வு முடிவுக்கான பின்னணியை முதல்முறையாக மனம் திறந்து உருக்கமான கூறியுள்ளார்.

வெளிநாட்டு தொடர்களில் தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்டது தான், ஓய்வு முடிவுக்கு காரணம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்குச் சென்று, பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படாமல் வெளியே உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அது தனக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அஸ்வின் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். இது அணிக்கு பங்களிக்க விரும்பாததால் எடுத்த முடிவு அல்ல என்றும் மாறாக, வாய்ப்பு அளிக்கப்படாமல் சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாமே என்ற எண்ணம் தன் மனதில் ஆழமாக எழுந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.

மேலும் தனது இந்த முடிவு எந்தவிதமான தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவும் எடுக்கப்படவில்லை என்றும், குழந்தைகளும் வளர்ந்து வருவதால் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே எடுக்கப்பட்டது என்பதை அஸ்வின் தெளிவுபடுத்தினார்.

இதையும் படியுங்கள்:
ஒரு வீரருக்காக 2 இளம் வீரர்களை கழட்டி விட்ட பிசிசிஐ! அஸ்வின் பரபரப்பு குற்றச்சாட்டு!
Rahul Dravid, ashwin

தான் முன்னரே 34 அல்லது 35 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்ட அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், அது தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட அது போதுமான நேரத்தை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com