#BREAKING ஐபிஎல் 2026: பெங்களூருவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
Delhi Capitals won the match
RCB vs DCimage credit-indianexpress.com
Updated on

ஐபிஎல் 27-வது லீக் ஆட்டத்தில் இன்று இரு போட்டிகள் நடைபெற உள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறும் 27-வது லீக்கின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

நடப்பு ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியை கண்டுள்ளது. டெல்லி அணி 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளிப் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்திலும், டெல்லி அணி 6வது இடத்திலும் நீடிக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 20-ல் பெங்களூருவும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லை.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்ய அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெல்லி அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com