#BREAKING IPL 2026: குஜராத் அணிக்கு அதிர்ச்சி தோல்வி..!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி.
Royal Challengers Bengaluru
virat kohliimage credit- livemint.com
Updated on

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்க்கொள்கிறது.

நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், விளையாடிய 6 போட்டிகளில் 3-ல் வெற்றி, 3-ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது குஜராத் அணி.

கடந்த தோல்வியை மறந்து இரு அணிகளும் வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக வரிந்துகட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியதில் இரு அணிகளும் தலா 3-ல் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில் முதலில் போட்டிங் செய்ய களத்தில் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பெங்களூரு அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 5 விக்கெட்டுகள் வெற்றி பெற்றது.

இதன் மூலம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com