பைனல்ஸூக்கு வந்தாச்சு; பிரான்ஸ் கால்பந்து அணி கொண்டாட்டம்!

கால்பந்து அணி
கால்பந்து அணி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நள்ளிவு 12.30 மணிக்கு தோகாவின் அல் பேத் மைதானத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணிக்கும் மொராக்கோ அணிக்கும் இடையே  2-வது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது.

துவக்கத்திலேயே பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோல் அடித்து அசத்தினார். அதையடுத்து பிரான்ஸின் அதிரடி தாக்குதலை சமாளிக்க மொராக்கோ பலமாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை. ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவானி கோல் அடிக்க அந்த அணி 2 -0 என்ற கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் அணி இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெல்லும் பட்சத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக்கோப்பை வென்ற நாடாக பிரான்ஸ் சாதனை படைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com