மன அழுத்தத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!

மன அழுத்தத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!
Published on

காரணமின்றி அடிக்கடி கோபம், எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்களை எதிர்கொள்கிறீர்களா? உங்களுடைய விடை ஆம் என்றால், இது செரோடோனின் பற்றாக்குறையின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆனால் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இன்று செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் பற்றி பார்க்க போகிறோம். இதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

செரோடோனின் ஹார்மோனை அதிகரிக்கவும், மன ஆரோக்கியத்தை பராமரிக்கவும் ஒரு சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இது போன்ற உணவுகள் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் நேரடி விளைவை ஏற்படுத்துகின்றன. இது போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய தன்மை மற்றும் மனநிலையை மேம்படுத்தலாம்.

செரோடோனின் ஹார்மோன் என்றால் என்ன?

ஒருவரின் மனநிலையை தீர்மானிப்பதில் சிரோட்டனில் ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் செரிமான மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை மகிழ்ச்சி ஹார்மோன் என்றும் குறிப்பிடலாம். பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய உணர்வுகளான பயம், பதட்டம், கோபம் கவலை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் ஹார்மோன்களால் ஏற்படுகின்றன. இந்நிலையில் செரோடோனின் எனும் ஹார்மோன் சீராக சுரந்தால் மனம் அழுத்தமின்றி நீங்களும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு செரோடோனின் ஹார்மோன் சீராக இருக்க வேண்டியது அவசியம். இதனால் மகிழ்ச்சி, நேர்மறையான மனநிலை, குறைவான கவலை, நல்ல தூக்கம், ஆரோக்கியம் இது போன்ற நல்ல விளைவுகளைப் பெற அமினோ அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் டிரிப்டோபான் எனும் அமினோ அமிலம் உள்ளது. இவை செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய ஹார்மோன்களை உருவாக்கி மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

பாதாம்

பாதாம் பருப்பில் ஃபோலேட், மெக்னீசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மெக்னீசியம் செரோடோனின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் மூளையில் மகிழ்ச்சியான உணர்வுகளை உருவாக்குகிறது.

பால்

பாலிலும் டிரிப்டோபான் எனும் அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது செரோட்டின் உற்பத்தியை மேம்படுத்தி, தூக்க சுழற்சி மற்றும் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.இதனுடன் எலும்பு மற்றும் பற்களுக்கு நன்மை தரக்கூடிய கால்சியம் நிறைந்த பால் சார்ந்த பொருட்களையும் நீங்கள் சாப்பிடலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பால், சீஸ் போன்ற பால் சார்ந்த பொருட்களின் மூலம் டிரிப்டோபனை பெறலாம். தேவையற்ற கலோரிகளைத் தடுக்க, முடிந்தவரை குறைந்த கொழுப்புள்ள பால் மாற்றுகளை தேர்வு செய்யவும்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள் டிரிப்டோபனின் வளமான ஆதாரம் ஆகும். சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு பன்னீரில் டிரிப்டோபன் நிறைந்துள்ளது. மேலும் சைவ உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், டிரிப்டோபனை பெற சோயா பொருட்களை தங்கள் உணவு சேர்த்துக் கொள்ளலாம்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் உள்ள டிரிப்டோபான் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக, அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் எனும் புரதம் உள்ளது, இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

செரோடோனின் அளவை பராமரிக்க இந்த உணவுகளை ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளுடன் சேர்த்து சாப்பிட மறக்காதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com