"எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது". மெளனம் கலைத்த ரோகித் சர்மா!

Rohit Sharma broke the silence!
Rohit Sharma broke the silence!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 சர்வதேச போட்டித் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இருந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. நீண்டா இடைவெளிக்குப் பிறகு ரோகித் மற்றும் விராட் கோலி, டி20 ஒருநாள் போட்டிக்கு திரும்பிய நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தானை வென்றுள்ளது.

ரோகித் மற்றும் விராட் கோலி ஆகிய இரு பிரபல ஆட்டக்காரர்களும் டி20 சர்வதேச போட்டிக்கு திரும்பியதன் நோக்கமே, இந்த ஆண்டு அமெரிக்காவிலும், மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்பதுதான்.

டி20 போட்டிக்குத் திரும்பி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றதுமே ரோகித், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியிலிருந்து நீக்கும் முக்கிய முடிவை எடுத்தார். இவர்களை அணியில் சேர்க்காததற்கான காரணம் எதையும் பி.சி.சி.ஐ. தெரிவிக்கவில்லை.

பின்னர் இஷான் கிஷன் தமது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உடல்நலத்தை காரணம் காட்டி ஓய்வுபெற்ற இஷான் கிஷன், திடீரென துபாயில் நடந்த பார்ட்டிக்கு சென்றது பி.சி.சி.ஐ.-க்கு அதிருப்தியை அளித்தது.

 இதனிடையே தகுதியின் அடிப்படையில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியிருந்தார். அவரது இடத்துக்கு போட்டியிருந்ததால் தகுதி அடிப்படையில் வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 இதனிடையே ரோகித் சர்மா ஒரு பேட்டியில், கிரிக்கெட் விளையாட்டில் திறமைசாலிகள் பலர் இருந்தாலும் ஒரு அணியில் 15 பேருக்கு மேல் தேர்வு செய்ய முடியாது. அதிகம் போட்டியிருக்கும் நிலையில் அணிக்கானவர்களைத் தேர்ந்தெடுப்பது சவாலாக இருந்தது. உலக கோப்பை ஒருநாள் போட்டியின்போது டி20 போட்டிகளில் பலருக்கு வாய்ப்பளித்தோம். அவர்கள் சிறப்பாகவே செய்தார்கள். ஆனால், பிரதான அணியை தேர்ந்தெடுக்கும்போது சிலர் விடுபட்டுபோனார்கள். இது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனால், எங்களது வேலை நல்ல அணியை தேர்ந்தெடுப்பதுதான். 25-30 வீர்ர்கள் இருக்கும் நிலையில், யார் எப்படி ஆடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டுதான் அணிக்கானவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்றார் ரோகித் சர்மா.

இதையும் படியுங்கள்:
திருப்தி இருக்கா உங்களுக்கு?
Rohit Sharma broke the silence!

எல்லோரையும் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம். சிலரை திருப்திபடுத்துவதற்காக அணிக்கு ஆட்களை தேர்வு செய்ய முடியாது. டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அணியை நிர்வாகம்  இன்னும் தேர்வுசெய்யவில்லை. டி20 போட்டிகளை நாம் இறுதி செய்துள்ளோம் அவ்வளவுதான் என்றார் ரோகித்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. ஆனால், விளையாடுபவர்களில் 8 முதல் 10 பேர் மனதில் இருக்கிறார்கள். அணி தேர்வுக்கு முன் போட்டி நடைபெறும் இடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. டி20 போட்டிக்கு சரியான ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நானும் விராட் கோலியும் கவனமாக இருக்கிறோம்.

கேப்டன் என்ற முறையில் நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான்: எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. அதே நேரத்தில் அணியின் தேவை என்ன என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றார் ரோகித் சர்மா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com