டி20 உலககோப்பை பற்றி ரோகித் ஷர்மா ஓப்பன் டாக்!

Rohit Sharma's story
Rohit Sharma's story

ப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணியின் கடைசி டி20 போட்டிக்கு பின்னர் பேட்டி அளித்த ரோகித் ஷர்மா உலக கோப்பை திட்டத்தைப் பற்றி பேசினார். டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியில் இதுவரை 8 முதல் 10 வீரர்கள் விளையாடப்போவது உறுதியாகிவுள்ளது எனவும் கூறினார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் டி20 உலககோப்பை தொடர் நடைப்பெறவுள்ளது. இதற்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் ஆகியவை ஏற்கனவே வெளியாகின. இதற்காக 20 அணிகளும் தயாராகிவருகின்றன. அந்தவகையில் உலககோப்பைக்கு முன்னர் தனது கடைசி டி20 போட்டியை நேற்று இந்திய அணி விளையாடியது. ஆப்கானிஸ்தானை

எதிர்த்து விளையாடிய இந்த போட்டியில் இந்திய அணி போராடி வென்றது. முதலில் 20 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி ரோகித் , ரிங்கு கூட்டணியில் நல்ல ரன்களைப் பெற்றது. இதனையடுத்து இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை தோல்வியடைய செய்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி மூன்றிலுமே வெற்றிப்பெற்று ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது.

இதனால் டி20 உலககோப்பையில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது என்றே கூறலாம். இந்த போட்டிக்குப் பின்னர் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டி அளித்தார். “என்னைப் பொறுத்தவரை ஒருநாள் உலககோப்பைத் தொடரே என்னை ஏமாற்றமடைய செய்தது. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக நான் மிகவும் கடினமாக உழைத்தேன். என் வாழ்வில் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பைக்கு பின்னர் ஜூன் மாதம் விளையாடப்போகும் டி20 உலககோப்பைத் தொடரே மிகவும் முக்கியமானது.

இம்முறை நிச்சயமாக வெற்றிபெறுவோம். இதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். ஸ்விட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் உள்ளிட்ட ஷாட்களை இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி செய்துவருகிறேன். டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியில் 15 வீரர்களை முழுமையாக இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் 8 முதல் 10 வீரர்கள் வரை திட்டத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களின் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்பதால் அதற்கேற்றவாரு தான் வீரர்களைத் தேர்வு செய்யமுடியும்” என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com