100 டி20 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து ரோகித் சர்மா சாதனை!

Rohit Sharma record 100 T20 wins!
Rohit Sharma record 100 T20 wins!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நூறு டி20 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். வியாழக்கிழமை மொஹாலியில் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

இங்கிலாந்து அணியின் டானி வியாட் மட்டும்தான் 111 டி20 போட்டிகளில் வென்று ரோகித்தைவிட முதலிடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் அலிஸ்ஸா ஹீலே மற்றும் எலிஸ்ஸி பெர்ரி இருவரும் 100 டி20 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த பிறகு, வெள்ளை பந்தில் நடைபெறும் போட்டியில் முதல் முறையாக ரோகித் விளையாடியுள்ளார்.

ஆடவர் கிரிக்கெட்டில் ரோகித் 100 டி 20 போட்டிகளில் வென்றுள்ளார். ஷோயிப் மாலிக் 86, விராட் கோலி 73, முகமது ஹபீஸ் 70, முகமது நபி 70 போட்டிகளில் வென்றுள்ளனர்.

14 மாதங்களுக்குப் பின் டி20 சர்வதேச போட்டிக்கு திரும்பிய ரோகித் சர்மாவுக்கு வியாழன்று நடைபெற்ற போட்டி மறக்கமுடியாதது ஆகும்ம். ரோகித் மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய போதிலும் இரண்டாவது பந்து வீசப்பட்ட நிலையில் ரோகித் ரன் அவுட்டானார்.

ரோகித் சர்மா முதல் முறையாக வெள்ளைபந்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்றார். மொஹாலியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. ஆப்கன் அணியில் முகமது நபி சிறப்பாக விளையாடினார்.

இதையும் படியுங்கள்:
600 சிக்ஸர் சாதனை நோக்கி ரோகித் ஷர்மா! எவ்வளவு முக்கியமான சாதனை தெரியுமா?
Rohit Sharma record 100 T20 wins!

இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தானை வென்றது. சிவம் துபே (60) மற்றும் ஜிதேஷ் சர்மா (31) இருவரும் சிறப்பாக ஆடினர். சிவம் துபே 40 பந்துகளை சந்தித்து 60 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். ஜிதேஷ் சர்மா 20 பந்துகளை சந்தித்து 31 ரன்கள் குவித்தார்.

இந்த வெற்றியை அடுத்து இந்தியா 1-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது. 2 வது டி20 ஒருநாள் சர்வதேச போட்டி வருகிற 14 ஆம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com