ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட் சாதனை!

Ruturaj Gaikwad.
Ruturaj Gaikwad.
Published on

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில், இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட் சாதனை படைத்தார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தம் 223 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியா 55.75 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இது ஒரு சாதனையாகும். முன்னதாக 2021 ஆம் ஆண்டு நியூஸிலாந்தின் மார்டின் குப்தில், ஐந்து போட்டிகள் தொடரில் 218 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஒருநாள் டி-20 போட்டியில் ருதுராஜ் 10 ரன்களில் அவுட்டாகி இருந்தாலும் மற்ற நான்கு போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல், விராட் கோலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை ருதுராஜ் பெற்றுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் எடுத்ததும் அர்ஷதீப் சிங், முகேஷ் குமார் இருவரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலியாவை இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதாவது இந்த போட்டித் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்கள் குவித்தார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பென் மெக்டெர்மோட் 54 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்ரேயாஸ் ஐயரை பந்துவீச்சில் வெளியேற்றியதும் அவரே. ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது.

முகேஷ்குமார் சிறப்பாக பந்துவீசி 32 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் 21 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் எடுத்தார். ரவி விஷ்ணோய் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com