தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷமி, தீபக் ஏன் இடம்பெறவில்லை?

Mohammed Shami and Deepak Chahar
Mohammed Shami and Deepak Chahar
இதையும் படியுங்கள்:
இனி எந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் ஜெர்ஸி 7 கிடையாது..தோனியைப் பெருமைப்படுத்திய பிசிசிஐ!
Mohammed Shami and Deepak Chahar

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் அனுபவம் மிக்க இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறவில்லை. முகமது ஷமி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதேபோல மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான தீபர் சாஹர், ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தகவல்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சனிக்கிழமை அறிவித்துள்ளது. கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக சிகிச்சை பெற்று வரும் முகமது ஷமி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் இன்னும் தகுதிச் சான்றிதழ் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷிமி, உடல் தகுதி பெறாததால், அவருக்கு மருத்துவக் குழுவினர் சான்றிதழ் அளிக்காததால் டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம்பெறுவது சந்தேகமே என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாட இயலாது என்று தெரிவித்துள்ளார். குடும்பத்தில் மருத்துவப் பிரச்னை காரணமாக போட்டியில் பங்குபெறமுடியாது என்று தீபக் தெரிவித்துள்ளதாக பி.சி.சி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

தீபக் சாஹர், ஒருநாள் போட்டியில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக அர்ஷதீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வேட், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்). சஞ்சு சாம்ஸன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், முகேஷ்குமார், அவேஷ்கான், அர்ஷதீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com