"அப்படியே ராகுல் டிராவிட் தான்..." – மகாராஜா டி20 தொடரில் கலக்கிய மகன் சமித் டிராவிட்..!

அப்பா ராகுலை விட அதிரடி! புதிய பரிமாணத்தில் களமிறங்கியுள்ள சமத் டிராவிட்டின் அலசல்.
Rahul Dravid son
samath dravid First Post
Updated on

ராகுல் டிராவிட்டின் மகன் சமத் டிராவிட் தற்போது உள்ளூர் அணி போட்டிகளில் கலக்கி வருகிறார். நேற்று ஹூப்ளி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற, மகாராஜா டிராபி கே.எஸ்.சி.ஏ டி20 2026 தொடரின்போது, ​​ஹூப்ளி டைகர்ஸ் அணியை கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய சமித் டிராவிட் பேட்டிங் செய்த போது ,அவரது பேட்டிங் ஸ்டைல் ராகுல் டிராவிட்டை போலவே இருந்தது.

அவரது ஆட்டத்தின் பாணியினைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அப்படியே அவரது அப்பாவை போலவே நிதானமாக விளையாடுகிறார். அவர் பேட்டினை தூக்கும் முறையும், ஷாட் அடிக்கும் முறையும், பந்துவீச்சாளர்களை கவனிக்கும் முறையும், அப்படியே அவரது தந்தையை பிரதிபலிப்பது போலவே இருக்கிறது என்று, ரசிகர்கள் ராகுலின் பழைய கிரிக்கெட் வீடியோக்களை ஒப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

நெருக்கடியான நேரத்தில் இவர் அவரது அப்பாவை போலவே நிதானமாக விளையாடுகிறார் , அதே நேரம் ராகுலை விட இவரது ரன் வேகம் அதிகமாக உள்ளது. இந்தப் போட்டியில் 23 பந்துகளை எதிர்கொண்ட இவர் 6 பவுண்டரிகளை விளாசி 32 ரன்கள் எடுத்தார். இவரது நிலையாக ஆட்டம் மற்ற வீரர்களின் அதிரடி ஆட்டத்திற்கு ஆதரவாக இருந்தது.

கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேன்களில் ராகுல் ட்ராவிட்டும் ஒருவர். ஒரு காலகட்டத்தில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சச்சின் , கங்குலி , டிராவிட் ஆகியோர் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டனர். இந்த பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் பொழுது எதிரணியை நிலைகுலையே செய்வார்கள். சச்சின் நிலைத்திருக்க குறிப்பிட்ட ஓவர்கள் வரை அவரது ஆட்டம் சூடு பிடிக்க வேண்டும்.

கங்குலியை பொறுத்தவரை அதிரடி ஆட்டக்காரர் என்று பெயர் பெற்றவர். அவர் களமிறங்கிய சில நிமிடங்களிலேயே அடித்து ஆட தொடங்குவார். அவர் நிலைத்து நிற்பார் அல்லது பாதியிலே அவுட் ஆகி விடுவார். ஆனால் , போட்டிகளில் எதிரணிக்கு பெரும் தொல்லையே "இந்தியாவின் தடுப்பு சுவர்" என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் தான். காரணம் ராகுல் டிராவிட்டிற்கு பந்து வீசியே பல பவுலர்கள் சோர்வுற்று வெறுத்துப் போய் விடுவார்கள்.

Rahul and son batting style
Samath dravid and Rahul Dravid Money control

ராகுல் டிராவிடின் ஆட்டம் எப்போதும் அதிரடி பாணியில் இருக்காது. அவரது ஆட்டம் ஒரு நாள் போட்டிகளுக்கு உகந்ததைப் போல், ஒவ்வொரு பந்திருக்கும் ஒவ்வொரு ரன் எடுப்பதை போல சராசரியாக விளையாடுவார். தேவை ஏற்படும் பட்சத்தில் இறுதி ஓவர்களில் அதிரடியாகவும் ராகுல் விளையாடுவார். இவர் நிலைத்து நின்று விட்டால் அவரது விக்கெட்டை எடுப்பது எதிரணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

ஒரு காலகட்டத்தில் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக ராகுல் போற்றப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பொருத்தவரை இந்திய அணி வெல்வது கடினம் என்று தெரிந்து விட்டால், ராகுல் டிராவிட் களத்தில் இருந்தால் மட்டும் போதும், அவர் எப்படியும் அவுட் ஆகாமல் நேரத்தினை கடத்தி மேட்சை டிரா ஆக்கிவிடுவார். அவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ரன்களை குவிக்க 300 பந்துகளுக்கு மேல் எடுத்துக்கொண்டு நிதானமாக விளையாடுவார்.

சமத் பேட்டிங் ஸ்டைல் அப்பாவை போல இருந்தாலும் , இவர் ஒரு தனித்துவமிக்க ஆல்ரவுண்டராக உருவாக்கியுள்ளார். 2023-24-ஆம் ஆண்டில் கர்நாடகாவில் நடைபெற்ற கூச் பெஹார் கோப்பை தொடரில் 362 ரன்கள் குவித்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தியும் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட்டார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு U –19 அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் காயம் காரணமாக பங்கேற்க இயலவில்லை. தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தும் அவர் , அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு தராத கம்பீர்... கொதித்தெழுந்த முன்னாள் வீரர்கள்!
Rahul Dravid son
logo
Kalki Online
kalkionline.com