பருவகால உணவு முறைகள்.

பருவகால உணவு முறைகள்.

ந்த பருவநிலை மாற்றம் என்றாலும் அது முதலில் நம் ஆரோக்யத்தைத்தான் பாதிக்கும். அந்தந்த காலத்திற் கேற்ற உணவு பழக்கங்களால் நம் முன்னோர்கள் பெரிய‌ ஆரோக்ய குறைவில்லாமல் நலமாக வாழ்ந்தார்கள். இப்போதோ முதியோரை மட்டுமன்றி சிறிய குழந்தைகளிலிருந்து பெரிய, இளைஞர், நடுத்தர வயதினர் என அனைவரும் எதாவது உடல் உபாதை களோடு வாழ்கின்றனர்.

இதைப் போக்க பருவத்திற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடலானது பாதிப்பின்றி ஆரோக்யமாக இருக்கும்.

சந்த ருது என்னும் இளவேனிற் காலத்தில்அதாவது சித்திரை, வைகாசி மாதங்களில் கபம் அதிகரிக்கும். பசி இருக்காது. எனவே, எளிதில் செரிக்கக்கூடிய உணவையே உண்ண வேண்டும்.

கிரீஷ்ம ருது என்னும் முதுவேனிற் காலத்தில், ஆனி, ஆடி மாதத்தில் வாயு அதிகமாகும். உடல் வலுவிழக்கும்.எனவே கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ர்ஷருது எனும் கார் காலத்தில், ஆவணி புரட்டாசி யில் பசி அதிகமிருக்காது. எனவே எளிதில் செரிக்கக்கூடிய தை சூடாக சாப்பிட வேண்டும்.

ரத் ருது என்னும் (ஐப்பசி, கார்த்திகை) கூதிர் காலத்தில் பித்தம் அதிகமாகும். கொழுப்பு சத்துள்ளவற்றைத் தவிர்த்து சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹேமந்த ருது எனும் முன்பனிக்காலத்தில் (மார்கழி, தை மாதத்தில்) இரவுப் பொழுது அதிகமென்பதால் காலையில் சீக்கிரம் பசிக்கும். சூடான உணவை தாமதிக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிசிர ருது என்னும் பின்பனிகாலத்தில் (மாசி, பங்குனி) கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சீசனுக்கேற்றவாறு ஆரோக்கியமான உணவு முறைகளை கடைப்பிடிக்க உடலும் உள்ளமும் பிணியின்றி நம்மை மேம்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com