சேவாக் தேர்ந்தெடுத்த டாப் 5 பேட்ஸ்மேன் லிஸ்ட் : கில், கோலி இல்லையா? அப்போ வேற யாரு?

சேவாக் தேர்ந்தெடுத்த டாப் 5 பேட்ஸ்மேன் லிஸ்ட் : கில், கோலி இல்லையா? அப்போ வேற யாரு?
Published on

ஐபிஎல் 2023 16வது சீசன் போட்டிகள் தற்போதுவரை விறுவிறுப்பாக நடைபெற்று, நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டாலும், இந்த சீசனில் சுப்மன் கில் ஆட்டம் குஜராத் அணிக்கு வெறித்தனமான வெற்றியையும் பெற்றுத் தந்துள்ளது. அதேபோல் இந்த சீசன் முழுவதும், இரு அணிகளின் பேட்டிங் வரிசையிலும் சிறப்பான ஆட்டத்தைக் காண முடிகிறது. அதனால் நாளைய இறுதிப்போட்டி சற்று விறுவிறுப்பாக அமையவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக், இந்த ஐபிஎல் தொடரில் டாப் 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். இது அவரது தேர்வு மட்டுமே.

சேவாக் இந்த தேர்வு குறித்து கூறும்போது, நான் துவக்க ஆட்டக்காரர்களை அதிகமாக தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

முதலாவதாக ரிங்கு சிங்கை தேர்வு செய்கிறேன். அவரை தேர்ந்தெடுத்தால் யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். காரணம் இதற்கு முன்பு யாரும், 5 சிக்ஸர்கள் அடித்து யாரும் அணியை வெற்றியடையச் செய்யவில்லை.

இரண்டாவதாக, ஷிவம் துபேவை தேர்ந்தெடுக்கிறேன். அவர் 33 சிக்ஸர்களை அடித்துள்ளதோடு, ஸ்டிரைக் ரேட் 160 ஆக உள்ளது. இந்த வருடம் திறமையாக விளையாடி வருகிறார்.

மூன்றாவதாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரது சிறப்பான பேட்டிங், அவரை தேர்ந்தெடுக்க வைத்தது.

நான்காவதாக, சூர்யகுமார் யாதவ். முதலில் அவர் சிறப்பான பார்மில் இல்லையென்றாலும், ஐபிஎல்-லின் பிந்தைய ஆட்டங்களில் அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தினார்.

கடைசியாக நான் தேர்வு செய்ய எனக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதால், நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹெய்ன்ரிச் கிளாசனை தேர்வு செய்கிறேன். இந்தியாவில் ஒரு வெளிநாட்டு வீரராக சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வதை எப்போதாவதுதான் பார்க்கமுடிகிறது. என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com