

அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வரும் ஷிகர் தவான், தற்போது ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஷிகர் தவான் இதுவரை 208 மேட்சுகளில் பங்கெடுத்த நிலையில், 6370 ரன்களைக் குவித்துள்ளார். ஐபிஎல்லில் ஷிகர் தவானின் அதிகபட்ச ஸ்கோர் 106. இதுவரை, 39 முறை 30+ மற்றும் 27 முறை 20+ ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார்.
இவர் ஐபிஎல்-லில் 2 சதங்கள், மற்றும் 47 முறை 50 ரன்களுக்கும் அதிகமா எடுத்திருந்த நிலையில், சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 86 ரன்கள் எடுத்த நிலையில், ஐபிஎல்-லில் தனது 48வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த வரிசையில், விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் ஐபிஎல்-லில் 225 போட்டிகளில் பங்கெடுத்து, 5 முறை 100 ரன்களையும், 45 முறை 50 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.