எல்லா பந்திலும் சிக்ஸ் அடிக்காதே! தோனி சொன்ன அட்வைஸ் ! மாறிய சிவம் துபேயின் ஆட்டம்..!

shivam dube
shivam dubesource:cric tamil
Published on

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை 10ஆவது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பிப்ரவரி 18ஆம் தேதி இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற குரூப் சுற்று போட்டியில்ஷிவம் துபே 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்.

நெதர்லாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது .நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஷிவம் துபே 5 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை 193ஆக விரைவில் உயர்த்தினார். பந்து வீச்சிலும் இரண்டு விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக ஜொலித்தார்.

ஆனால் ஆல் ரவுண்டரான ஷிவம் துபே ஆரம்ப காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் 'ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டார்.அப்போதுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கொடுத்த அறிவுரை தான் பயத்தை போக்கியதாக ஷிவம் துபே மனம் திறந்து கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் விளையாடி, தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறி உள்ள ஷிவம் துபே ஆரம்ப காலங்களில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு வந்த புதிதில் வேகப்பந்து வீச்சாளர்களின் 'ஷார்ட் பிட்ச்' பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியதோடு, அந்தப் பந்துகளை சரியாக அடிக்க முடியவில்லை. சர்வதேச போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் இந்த பலவீனத்தை சரி செய்தே ஆக வேண்டும் என தீர்மானம் செய்து அதற்காக மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன் என ஷிவம் துபே கூறினார்.

தோனி சொன்ன ரகசியம் :

பேட்ஸ்மேன்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சுக்கு எதிராக அடிக்க முடியாமல் திணறும்போது சிக்ஸர் அடித்தால் பயம் போகும் என நினைப்பார்கள் .ஆனால் துபேயின் சிந்தனையை தோனி கூறிய அறிவுரை முற்றிலும் மாற்றியது.

தோனி பாய் என்னிடம் ஷார்ட் பால் வரும்போது கண்டிப்பாக சிக்ஸர் அடிக்க வேண்டும் என அவசியம் இல்லை. அதற்கு பதிலாக ஒரு ஒரு ரன் அடித்து விட்டு மறுமுனைக்கு செல்லலாம் அல்லது பௌண்டரிக்கு பந்தை விரட்டலாம். ஆனால் விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இதுதான் முக்கியம் எனக் கூறினார். தோனி கூறிய வார்த்தைகள் என் மனதில் ஆழமாக பதிந்ததாக ஷிபம் துபே தோனி கூறிய ரகசியத்தை தெரிவித்தார்.

தோனி கூறிய அறிவுரையின்படி 'ஷார்ட் பிட்ச் 'பந்துகள் வரும் போது சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட கற்றுக்கொண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 66 ரன்கள் விளாசியதோடு இரண்டு விக்கெட் களை கைப்பற்றி சிறப்பாக விளையாடி வருகிறார் .தற்போது சுழற்பந்துவீச்சு மட்டுமல்லாமல் வேகப்பந்து வீச்சையும் சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்து வருவதற்கு தோனியின் வழிகாட்டுதலே காரணம் என நெகிழ்ச்சியுடன் சிவம் துபே கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்:
அதிர்ஷ்டம் இல்லாத எண்ணா 13? 13 ரன்களில் அவுட்.. அதோடு முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை!
shivam dube

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com