

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் முடித்தவுடன் மழை குறிப்பிட்டதால், அந்த போட்டி முடிவு எதுவுமின்றி ரத்து செய்யப்பட்டது. டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று ஸ்ட்ரெட்போர்ட்டில் உள்ள , பழைய டிராபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.
இந்த போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக களம் இறக்கப்பட்டார். அபிஷேக் சர்மா தனது துடிப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 24 பந்துகளில் அதிவேகமாக 43 ரன்களை குவித்தார். வைபவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடி தொடங்கினாலும் 14 ரன்களில் வெளியேறினார்.
இஷான் கிஷன்(49) நிதானமாக வவிளையாடி நூலிழையில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (37) , திலக் வர்மா ( 24*) ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சாம் குர்ரன் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அடுத்ததாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி , தொடக்கத்திலேயே இரண்டு தொடக்க ஆட்டகாரர்களையும் டக் அவுட்டில் இழந்து அதிர்ச்சிக்குள்ளானது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரிலேயே இரண்டு கோல்டன் டக் அவுட்களை எடுத்து இந்திய அணியை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். ஆயினும் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஹாரி புரூக் மற்றும் ஜேக்கப் பித்தல்(76) இணைந்து , ஆட்டத்தின் போக்கினை மாற்றினர்.
ஹாரி 15 பந்துகளில் மிகவும் அதிரடியாக விளையாடி 39 ரன்களை குவித்திருந்தார் , இன்னும் சில பந்துகள் நின்றிருந்தால், மிகவும் அதிவேக அரைசதம் அடித்த சாதனையையும் அவர் படைத்திருப்பார். அதன் பின்னர் வந்த டாம் பேட்டன் 39 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சேர்த்தார். இறுதியில் 19 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 191 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் நன்றாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் , அக்சர் படேல் 20 ரன்களை மட்டும் கொடுத்து இருந்தாலும் , மற்ற பவுலர்கள் இங்கி அணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த தவறினர். மிகவும் முக்கியமாக ரவி பிஷ்னோய் தனது ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கியது தான் , அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்த ஜேக்கப் பித்தலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த தோல்வியின் மூலம் கேப்டனாக பதிவேற்று தொடர்ச்சியாக 3 தோல்விகளை ஷ்ரேயாஸ் சந்தித்துள்ளார். இந்திய அணியின் தொடர் தோல்வி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 5 போட்டிகளை கொண்ட டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரை வெல்ல இந்திய அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும். அணியின் தற்போதைய நிலையில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா? என்று தெரியவில்லை.
புதிய வீரர் வைபவ் சீனியர்களின் ஆட்டத்தினை புரிந்துக் கொள்ள சில போட்டிகள் தேவைப்படும் , வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வைக்கப்பட்டதும் , தொடர் தோல்வியிலிருந்து மீட்கும் ஒரு கருவியாக அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதும் , அவர் விரைவில் வெளியேற காரணமாக இருக்கிறது.