சின்ன சின்ன (சித்த மருத்துவ) குறிப்புகள்!

சின்ன சின்ன (சித்த மருத்துவ) குறிப்புகள்!

மேஜைக் கரண்டி அளவு நெல்லிக் காய்ச் சாறுடன் ஒரு கப் பாகற்காய்ச் சாறும் சேர்த்து தொடர்ந்து தினமும் ஒருவேளை இரண்டு மாதங்களுக்க அருந்தி வந்தால் சர்க்கரை வியாதி – நீரிழிவு நல்லவிதமாகக் கட்டுப்படும்.

நெல்லிக்காய் இலையைக் கொஞ்சம் அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு சரியாகும்.

காலில் அடிபட்டு வீக்கம் இருந்தால் முருங்கை இலையை அரைத்து ‘வீக்கம்’ மேல் கட்டி ‘பத்து’ போட்டு வந்தால் குணமாகும்.

முருங்கை இலை ஈர்க்கு, கறி வேப்பிலை ஈர்க்கு இரண்டையும் கஷாயம் போட்டு முப்பது மில்லி சாப்பிட்டு வந்தால் வயிற்றின் கிருமிகள் அகன்றுவிடும்.

முருங்கை இலைச் சாற்றைப் பாலில் கலந்து குழந்தைகளுக்குத் தந்தால் அவர்களின் எலும்புகள் வளர்ச்சி அடையும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

முருங்கைப்பூ, முருங்கைப் பிஞ்சை சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் உடலின் வெப்பம் தணியும். ஆண்மை கூடும்.

முருங்கைப் பூவை தயிரில் ஊற வைத்துச் சாப்பிட்டால் குழந்தை பிறக்க சக்தி கிடைக்கும்.

முருங்கைச் சாறு பத்து மில்லியுடன், வெள்ளரிக்காய் சாறு பத்து மில்லியைக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகும்.

ஞ்சி சாறைப் பாலில் கலந்து கொடுத்தால் சிறு குழந்தைாகள் வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

ஞ்சையை வாயில் வைத்துச் சாறை உறிஞ்சிய பிறகு துப்பி வந்தால் தொண்டைப் புண்கள் சரியாகும்.

ஞ்சி சாறு, வெங்காய சாறு முப்பது மில்லி கலந்து அருந்தினால் ‘வாந்தி’ நின்றுவிடும்.

சீரகத்தை மேஜைக் கரண்டி அளவு எடுத்து வறுத்துப் பொடி செய்து, வாழைப் பழங்களை ‘பஞ்சாமிர்தம்’ ஆக்கி அதனுடன் சீரகப்பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும். பித்தம் ஆகலும்.

தேங்காய்ப் பாலுடன் வெண்ணெய் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ‘வாய்ப்புண்’ குணமாகும்.

தும்பைப் பூக்களை நல்லெண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்தால் ‘பீனிசம்’ என்ற தீராத ஜலதோஷம் குணமாகும்.

டாதொடை கஷாயம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தாலும் ஆஸ்துமா குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com