ஒலிம்பிக் போட்டிகளில் நடந்த சில சுவாரசியங்கள்!

ஜூன் 23, சர்வதேச ஒலிம்பிக் தினம்
ஒலிம்பிக் சின்னம்
Olympic symbolhttps://tamil.abplive.com

கிரிஸ் நாடு உலகிற்கு வழங்கியதுதான் ஒலிம்பிக்ஸ். இதில் அனைத்து நாடுகளின் ஒன்றிணைப்பின் மூலம் சகோதரத்துவம் வளர வழி வகுக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக ஒலிம்பிக் கிரேக்க நாட்டின் ஆல்வேஸ் நதிக்கரையில் நடத்தப்பட்டது. இங்கு நடந்த போட்டிகளுக்கு கிரீஸின் புண்ணியத் தலங்களில் ஒன்றான ஒலிம்பியா என்ற பெயரே சூட்டப்பட்டது.

இதன் சின்னம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட ஐந்து வளையங்கள் ஆகும். நீலம், சிவப்பு, கருப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய வண்ணங்களில் இந்த வளையங்கள் இருக்கும். இந்த வளையங்கள் ஐந்து கண்டங்களை ஒன்றிணைப்பைக் காட்டவே அமைக்கப்பட்டது.

ஒலிம்பிக் தீபம் என்பது ஒலிம்பியாவில் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்றப்பட்டு பந்தயம் நடைபெறும் நாட்டிற்கு தொடர் ஒட்டக்காரர்களால் எடுத்து வரப்படுகிறது. ஒலிம்பிக் கொடி வெள்ளைப் பின்னணியில் அமைந்திருக்கும் ஐந்து வளையங்களை கொண்டது. 1896ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய வளர்ச்சி கட்டங்கள் 20ம் நூற்றாண்டில்தான் நடந்தது. பல்வேறு விளையாட்டுகள் சேர்த்துக் கொள்ளப்படடன. அட்லாண்டாவில் 1996ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் நூற்றாண்டைக் கண்ட இது, இதுவரை 32 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 33வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 2024 ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடை பெற உள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நடந்த 10 சுவாரசியமான நிகழ்வுகளைக் காண்போம்.

சிட்னி நகரில் 2000ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக்கின்போது ஆஸ்திரேலிய நாட்டின் புள்ளியில் துறை, ‘ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நாடு எது?’ என்று ஆய்வு செய்தது. அவர்கள் ஆய்வின்படி அந்த ஒலிம்பிக் போட்டிகளில் 97 பதக்கங்கள் பெற்ற அமெரிக்கா முன்னிலை பெறவில்லை. வெறும் இரண்டே முக்கால் லட்சம் மக்கள் தொகை கொண்ட ‘பார்படாஸ்’ நாட்டிற்குதான் முதலிடம் கிடைத்தது. காரணம், அந்த குறைந்த அளவு ஜனத்தொகை கொண்ட நாடு 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றதே. அவர்கள் கணக்கெடுப்பின்படி அந்த ஒலிம்பிக் போட்டிகளில் மிக மோசமாக விளையாடிய நாடு எது தெரியுமா? இந்தியா.

1996ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக அமெரிக்கா ஒரு புதுவிதமான கணிப்பை செய்தது. போட்டிக்கு வந்த மொத்த நாடுகளின் மொத்த ஜி.டி.பி யை அடிப்படையாக வைத்து அந்த நாடு எத்தனை பதக்கங்கள் வாங்கும் என்று கணித்தார்கள். அதில் இந்தியா 3 பதக்கங்கள் வாங்கும் என்று கணித்தார்கள். ஒலிம்பிக் முடிந்து பார்த்தபோது மற்ற நாடுகள் விஷயத்தில் அவர்களது கணிப்பு துல்லியமாக இருந்தது. ஆனால், இந்தியா விஷயத்தில் அது ஏமாற்றி விட்டது. அந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு வெண்கலம் மட்டுமே டென்னிஸ் போட்டியில் வென்றது.

1980ம் ஆண்டில் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவை தவிர, பெண்கள் ஹாக்கி போட்டியில் கலந்துகொள்ள பல நாடுகள் மறுத்து விட்டன. உடனே ஜிம்பாப்வே நாட்டிற்கு விளையாட அழைப்பு விடுக்கப்பட்டது. அதுவும் கடைசி நேரத்தில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றது.

1968ல் மெக்சிகோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது போட்டிகள் அனைத்தும் மிக உயரமான இடத்தில் நடந்தது. கடல் மட்டத்திலிருந்து 2300 மீட்டர் உயரத்தில் மெக்சிகோ சிட்டி மைதானம் இருந்தது. அதுவே ஜம்பிங், வட்டு எறிதல், எடை தூக்குதல் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு எளிதாக இருந்தது. இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில்தான் பல உலக ரிக்கார்டுகள் ஏற்படுத்தப்பட்டன.

1964ம் ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாய்மரப் படகு போட்டியின்போது சக போட்டியாளரின் படகு திடீரென கவிழ்ந்தது. போட்டியில் வெற்றி பெறும் தருவாயில் இருந்த ஸ்வீடன் நாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகி சக போட்டியாளர்களை காப்பாற்றினார்கள். இதனால் சுவீடன் நாட்டு வீரர்கள் லார்ஸ் கன்னர் மற்றும் ஸ்டிக் லெனார்ட் ஆகிய இருவருக்கும் சிறந்த மனிதர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

ஆசியாவில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் 1964ம் ஆண்டில் நடத்தியது. இதற்காக டோக்கியோ ஒலிம்பிக்ஸை 3 பில்லியன் டாலர்கள் செலவழித்து நடத்தியது. போட்டிகளில் கிடைத்த பணத்தை கொண்டு அமெரிக்க அணுகுண்டு தாக்குதலுக்கு இலக்கான நாகசாகி, ஹீரோசிமா நகரை புதுப்பித்துக் கொண்டது.

2004ம் ஆண்டு கிரேக்க நாட்டில் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு லட்சம் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக கிரீஸ் அரசு 7000 கோடிகளை செலவு செய்தது. இது ஒரு ஒலிம்பிக் சாதனை. இந்தளவுக்கு வேறு எந்த ஒலிம்பிக்கிலும் பாதுகாப்பிற்கு செலவு செய்யப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியப் பாதையில் இட்டுச் செல்லும் சைக்கிள் ரைடிங்!
ஒலிம்பிக் சின்னம்

உலக அமைதியை வலியுறுத்தும் விதமாக புறாக்களை ஒலிம்பிக் நிறைவு விழாவில் பறக்க விடுவது மரபு. இதில் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் புறாக்களை பறக்க விடுவார்கள். இதில் சாதனையாக 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் 7200 புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன.

2008ம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு ஆசிய செல்வந்தர்களில் முதலிடத்தில் இருந்தவரும், ஹாங்காங் நாட்டின் பிரபல தொழிலதிபருமான லிகா சிங் 65 கோடிகளை நன்கொடையாக வழங்கினார். ஒலிம்பிக் போட்டிக்கு இந்தளவுக்கு வேறு யாரும் நன்கொடை தந்ததில்லை. இந்த ஒலிம்பிக் சீனாவின் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படும் 8ஐ மையப்படுத்தி நடந்தது. 2008ம் ஆண்டில் 8வது மாதமான ஆகஸ்ட் 8ந் தேதி இரவு 8மணிக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.

2020ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. இதற்காக 5000 மெடல்கள் அதற்கு தேவைப்பட்டன. இதற்குத் தேவையான தங்கம், வெள்ளியை பழைய செல்போன்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை பொது மக்களிடம் இருந்து சேகரித்து அதிலிருந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை செய்தது. இதற்காக 3.3 மில்லியன் பழைய செல்போன்கள் மற்றும் 14,630 டன்கள் எலெக்ட்ரானிக்ஸ் வேஸ்ட்களை சேகரித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com