யார் இந்த பிரசன்னா அகோரம்? தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஜொலிக்கும் தமிழர்!

Prasanna agoram
Prasanna agoramimge credit: The Hindu

சென்னையில் பிறந்த பிரசன்னா அகோரம் பல வருடங்களாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அலோசகராக இருந்து வருகிறார். கிரிக்கெட் ஆலோசகர் என்றால் என்ன? பிரசன்னா அகோரம் யார்? என்பனப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கிரிக்கெட் ஆலோசகர் என்றால் என்ன?

ஒரு கிரிக்கெட்டருக்கு எந்த ஷாட் நன்றாக வருகிறது? அவர் எந்த பவுலிங் ஸ்டைலுக்கு அவுட் ஆகிறார்? எந்த பேட்டிங்கில் சொதப்புகிறார்? ஏன் சொதப்புகிறார்? அதை எப்படி சரி செய்யலாம்? போன்றவற்றை எடுத்துரைப்பவர் கிரிக்கெட் ஆலோசகர். அதேபோல் அணி நிர்வாகத்திடம் அந்த கிரிக்கெட்டரின் தற்போதைய ஃபார்ம் மற்றும் இந்த மைதானத்தில் அவர் விளையாடலாமா என்பவனவற்றையும் அவர் ஆலோசனையாக கூறுவார்.

தனி ஒரு கிரிக்கெட்டருக்கும் அணி நிர்வாகத்திற்கும் துணைப் புரிவதோடு எதிரணி வீரர்களின் நிறை மற்றும் குறை என அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பவர்தான் கிரிக்கெட் ஆலோசகர். இவரே அணியின் பாதி வெற்றிக்கும் காரணமாபவரும் கூட. இவரின் முழு நேர வேலை கணினியில் கிரிக்கெட் போட்டி வீடியோக்களைப் பார்ப்பதிலும் மைதானத்திலும் தான் இருக்கும். தனி ஒரு கிரிக்கெட்டருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையில் பாலமாக விளங்குபவரும் இவரே. அந்தவகையில் கிரிக்கெட் அலோசகர் பிரசன்னா அகோரம் யார் என்பதைப் பார்ப்போம்.

பிரசன்னா அகோரம்:

சென்னையில் பிறந்த பிரசன்னா அகோரம் தமிழ்நாட்டிற்காக அண்டர் 19 போட்டிகளில் விளையாடினார். இந்த போட்டிகளில்தான் அணியில் விளையாடுவதை விட அந்த அணிக்கு ஒரு ஆலோசகராக இருந்து அணியை வெற்றியடைய செய்வதன் மகத்துவத்தைப் புரிந்துக்கொண்டார். கணினி அறிவியலில் முதுகலை பட்டம் முடித்த இவருக்கு பல IT நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வந்தப்படியே இருந்தது.

ஆனால் அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு கிரிக்கெட் ஆலோசகருக்கான சாப்ட்வேர் ஒன்றை கண்டுப்பிடிக்க ஆரம்பித்தார். முதலில் இவருக்கு யாருமே துணையாக இல்லை, "மைதானத்தில் இறங்கி ரன் எடுப்பதை விடவா இந்த விடியோ வேலை பெரிது" என்று அவரின் நலன்விரும்பிகள் கூறினார்கள். பிறகு 2005ம் ஆண்டு அண்டர் 19 தொடரில் கிரிக்கெட் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத்துடன் இணைந்து மைதானத்திற்கு சென்று போட்டியையும் வீரர்களின் செயல்களையும் கவனித்தார்.

Prasanna agoram
Prasanna agoramimge credit: Flickr

பிற்பாடு 2 வருடம் ஹாக்கி பற்றி கற்றுக்கொண்டு ஆலோசனை வழங்கி வந்தார். மீண்டும் 2008ம் ஆண்டு ஐபிஎல் லில் பெங்களூர் அணியின் கிர்க்கெட் ஆலோசகராக பணியில் சேர்ந்தார். அந்த தொடரில் கிரிக்கெட்டர்கள் டேல் ஸ்டின், மார்க் பவுச்சர்,ரே ஜென்னிங் ஆகியோரின் கவனத்தை ஈர்த்த பிரசன்னாவிற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆலோசகராகப் பணிப்புரிய வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

பிரசன்னாவின் ஆலோசக தந்திரம் என்னவென்றால், எதிரணி வீரர்களின் தனிப்பட்ட செயல்களை ஆலோசிப்பதே முதல் படி. அதாவது சில வீரர்கள் குறிப்பிட்ட அந்த ஷாட் அடிக்கும்போது விரல்களை மடக்குவார்கள் அல்லது கைகளை வேறு மாதிரி வைத்துக்கொள்வார்கள். அதனை பவுலிங் செய்யும் வீரர்களுக்கு தெரிவித்தால் பேட்ஸ்மேன் அந்த ஷாட்தான் அடிக்கப்போகிறார் என்று தெரிந்து அதற்கு ஏற்றவாரு பவுலிங் செய்து அவுட் கொடுப்பார். அதேபோல்  ஃபாஃப் டு ப்ளெஸிஸ் பற்றி ஒரு ரகசியத்தை சொல்லியிருக்கிறார் பிரசன்னா.

அதாவது ஃபாஃபின் ஸ்டைலை ஆய்வு செய்துப் பார்த்ததில் அவர் கடைசி இரண்டாயிரம் ரன்களில் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளிலும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளிலும்தான் அதிகம் ரன்களை எடுத்திருக்கிறார் என பிரசன்னா கூறியிருந்தார். மேலும் எதிரணியின் குறைகளும் நுட்பங்களையும் பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரசன்னா கூறுவார். இவர் தன் வாழ்நாளில் இதுவரை 150 முதல் 180 வீரர்களின் ஸ்டைல் பற்றி முழுவதுமாக ஆய்வு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
"ஆடுகளத்தை குறைசொல்லாமல் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" - இர்பான் பதான்!
Prasanna agoram

ஒருமுறை இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் 2015ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டி முடிவடையும் நேரத்தில் தோனி பேட்டிங் செய்துக்கொண்டிருந்தார், டேல் ஸ்டேன் பவுலிங் செய்துக் கொண்டிருந்தார். அப்போது தோனி லேப் ஷாட்டில் (Lap shot) எப்போதும் சொதப்புவார் என்று டேல் ஸ்டேனிடம் கூறி அதற்கேற்ற பந்தை வீச சொன்னார் பிரசன்னா. ஆனால் தோனி தென்னாப்பிரிக்கா உடனான போட்டி மற்றும் பிரசன்னாத்தான் ஆலோசகர் என்று தெரிந்த பொழுதிலிருந்து லேப் ஷாட் அடிக்கக் கற்றுக்கொண்டாராம்.

அந்த போட்டியில்தான் தோனி முதல் முறையாக லேப் ஷாட்டில் பவுண்டரி அடித்தார். அப்போது தோனி அவரைப் பார்த்து சிரித்த அந்த சிரிப்பு "உன் ஆலோசனை ஒன்றும் என்னிடத்தில் அவ்வளவு சுலபமல்ல" என்று கூறியதுப்போல் பிரசன்னாவிற்கு தோன்றியது என இதனைப் பற்றி அவரே ஒருமுறை கூறியிருந்தார்.

சென்னையிலிருந்து சென்று தென்னாப்பிரிக்காவின் பல வெற்றிக்கு காரணமான பிரசன்னா, கிரிக்கெட் ஒரு நாடு சார்ந்த விஷயமல்ல, அது ஒரு விளையாட்டு என்பதை தன் பணியின் மூலம் நிரூபித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com