ஆஸ்திரேலியா இந்தியா டி20 தொடருக்கு பின்னர் இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயனத்தில் இந்திய அணியின் கேப்டனாக கே. எல். ராகுல் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா இந்தியா டி20 தொடரை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்ல வுள்ளது. டிசம்பர் 10 ம் தேதி தொடங்கவிருக்கும் இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் ஓய்வில் இருந்த இந்திய சீனியர் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விராட் கோலி நேற்று டி20 தொடரில் பங்குப்பெறப்போவதில்லை எனக் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் ரோஹித் ஷர்மாவும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விடுப்பு எடுப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.
ஏற்கனவே உலககோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு பலம் வாய்ந்த அணியாக இருந்து விளையாடி வந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா இந்தியா நேருக்கு நேர் மோதிய ஆட்டத்தில் இந்திய அணியே வெற்றிப்பெற்றது. இதனால் அடுத்த தொடரில் தென்னாப்பிரிக்கா இந்திய அணியை பழி வாங்கவே இன்னும் கூடுதல் பலத்துடன் வரும். இந்நிலையில் இரண்டு பலம் வாய்ந்த கிரிக்கெட்டர்கள் இல்லாமல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு செல்லவுள்ளது.
மேலும் ரோஹித், விராட் இல்லாத காரணத்தால் கே. எல். ராகுல் இந்திய அணிக்கு தலைமைத் தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சில காலமாக கே. எல். ராகுலும் டி20 தொடர்களில் விளையாடுவதில்லை. இதனால் அவர் இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொள்வாரா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.
ஒருவேளை கே. எல். ராகுலும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இல்லை என்றால் சூர்யா குமார் யாதவ் அணியை வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது. உலககோப்பைத் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.