
ஐசிசி உலககோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா பங்களாதேஷ் இடையேயான நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் 140 பந்துகளில் 174 ரன்கள் குவித்து தோனியின் சாதானையை முறியடிக்க முயற்சி செய்தார்.
உலககோப்பை தொடரின் தென்னாப்பிரிக்கா அணி மிக பலமான அணியாக விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தென்னாப்பிரிக்கா அணி வீரர் குயின்டன் டி காக் 15 பவுண்டிரீஸ்கள் 7 சிக்ஸர்கள் அடித்து மொத்தம் 174 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் ஆனார்.
உலக கோப்பை தொடரில் நடைபெற்று வரும் இந்த தொடரே குயின்டன் டி காக்கிற்கு இறுதி தொடராக இருக்கும் என்பதால் முழு பங்களிப்புடன் விளையாடிவருகிறார். முதல் இரண்டு ஆட்டத்தில் சதம் அடித்த நிலையில் நேற்றைய போட்டியிலும் சதம் விளாசினார். டி காக் தொடரிலிருந்து விலகப்போகும் சமையம் இரட்டை சத அடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் 45.1 ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார் குயிண்டன் டிகாக்.
இதற்கு முன்னர் 2005ம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி 184* ரன்கள் எடுத்த முதல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்ற பட்டத்தைப் பெற்றார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஏற்கனவே தென்னாபிரிக்கா அணி வீரர் குயின்டன் டிகாக் 178 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்தார். மீண்டும் தற்போது 174 ரன்கள் எடுத்து நான்காம் இடத்தையும் பிடித்துள்ளார். பங்களாதேஷ் அணி வீரர் லிட்டன் தாஸ் 176 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தோனியின் ரெக்கார்டை இரண்டு முறை முயற்சி செய்தும் டிகாக் தவறவிட்டார். இதுபோன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை 150 ரன்கள் எடுத்த பட்டியலில் மூன்று 150* ரன்கள் எடுத்து டிகாக் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் பட்லர் மற்றும் கில்கிறிஸ்ட் 2 முறை 150* ரன்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்கள்.