SRH Vs PBKS: 2 ரன்களில் த்ரில் வெற்றிபெற்ற ஹைத்ராபாத் அணி!

SRH Team
SRH Team
Published on

நேற்று சண்டிகரில் நடைபெற்ற IPL போட்டியில் ஹைத்ராபாத் அணி 2 ரன்களில் பஞ்சாப் அணியை வென்றது. கடைசி வரை போட்டியை யார் கைப்பற்றுவார்? என்ற எதிர்பார்ப்பிலேயே போட்டி விறுவிறுப்பாகச் சென்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது. ரபாடாவின் முதல் பந்திலேயே முதலில் பேட்டிங் செய்த ஹெட் அடித்த பந்து, விக்கெட் கீப்பர் கைகளுக்கு நேராகச் சென்றது. ஆனால் பஞ்சாப் அணி ரிவ்யூ கேட்காததால் ஹெட் தப்பித்தார். இதனால் அவர் 15 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஹைத்ராபாத் அணி வெறும் 39 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்துத் தவித்தது. இதனால் ஹைத்ராபாத் அணி இம்பேக்ட் வீரரை இறக்கத் திட்டம் போட்டது. அந்தவகையில் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து தனது அதிரடி ஆட்டத்தை முடித்துக்கொண்டார். இதனால் 20 ஓவர் முடிவில் ஹைத்ராபாத் அணி 182 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி 183 என்ற இலக்குடன் பேட்டிங்கைத் தொடங்கியது. முதலில் களமிறங்கிய ஷிகர் தவான் 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். Johny Bairstow டக் அவுட் ஆன நிலையில், சாம் கரண்  29 ரன்களும், ஷிகந்தர் 28 ரன்களும் எடுத்து வெளியேறினர். இலக்கை அடைய நிறைய ரன்கள் இருந்த நிலையில் வழக்கம் போல் ஷஷாங் சிங் களமிறங்கி 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் கடைசி வரை நின்று ஆடினார். அதேபோல் இறுதியாக அஷுடோஷ் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தக் கூட்டணி 2 சிக்ஸர்கள் உட்பட 16 ரன்களை எடுத்து சிறப்பாக விளையாடினர்.

இதையும் படியுங்கள்:
CSK Vs KKR: புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு வந்த சென்னை அணி!
SRH Team

இறுதிவரை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பிற்கு நடுவில் இலக்கை அடையவிடாமல் தடுத்து ஹைத்ராபாத் அணி போட்டியை கைப்பற்றியது.

ஆகையால், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஹைத்ராபாத் அணி வெற்றிபெற்றது. இந்தத் தொடரில் ஹைத்ராபாத் அணி 5 போட்டிகள் விளையாடி, அதில் 3 போட்டிகள் வென்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே வென்று ஆறாவது இடத்தில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com