ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி!

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் பெற்றி வாகை சூடியது.
Sunrisers Hyderabad
Sunrisers Hyderabadimage credit-indianexpress.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்க்கொள்கிறது.

ஐதராபாத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வி என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில் 17-ல் ஐதராபாத்தும், 8-ல் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளும் தங்களது 7-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதனைதொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

அதனையடுத்து இமாலய இலக்கான 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணியால் ஐதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் ஐதராபாத் அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.

logo
Kalki Online
kalkionline.com