IPL 2026: ஆர்சிபியை பந்தாடிய ஐதராபாத்... 255 ரன்கள் குவித்து மிரட்டல் வெற்றி..!

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற 67-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியிடம் பெங்களூரு அணி படுதோல்வி அடைந்தது.
Sunrisers Hyderabad
Sunrisers Hyderabadimage credit-outlookindia.com
Updated on

ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 67-வது லீக் போட்டியில் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றை உறுதி செய்து விட்ட முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ், நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வி கண்டு 18 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளது.

அதேசமயம், ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி வெற்றி வேட்கையை தொடருவதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க தீவிரம் காட்டும். அதேநேரத்தில் டாப்- 2 இடத்திற்கு ஐதராபாத் குறிவைக்கும். மொத்தத்தில் சமபலம் வாய்ந்த அணிகள் வரிந்து கட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 14-ல் ஐதராபாத்தும், 12-ல் பெங்களூருவும் வென்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி 20 ஒவர் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பெங்களூரு அணியால் ஐதராபாத்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.

ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

logo
Kalki Online
kalkionline.com