Sri Vs Ind: 27 ஆண்டுகள் தொடர் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளுமா இந்தியா?

Ind Vs Sri
Ind Vs Sri
Published on

இன்று மதியம் 2.30 மணிக்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தோற்கும் நிலையில் உள்ளதால், 27 ஆண்டுக்கால தொடர் வெற்றி தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

இதுவரை இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையே இரண்டு ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டி ட்ராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து இன்று மூன்றாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் வென்றால்தான் இலங்கை அணி தொடரை கைப்பற்ற முடியும். ஒருவேளை இந்திய அணி வென்றால், தொடரை சமன் செய்ய முடியும்.

இந்திய அணியில் பவுலிங்கைப் பொறுத்தவரை பெரிய குறை ஒன்றும் இல்லை. ஆனால், பூம்ரா மற்றும் ஷமி இல்லாதது சிறு குறைதான். அதேபோல் ரோகித் ஷர்மாவிற்கு அடுத்து எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடுவதில்லை. விராட் கோலிகூட கடந்த 15 இன்னிங்க்ஸில் ஒரே அரைசதம்தான் அடித்திருக்கிறார்.

இப்படி இந்திய அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பும் நிலையில்தான், அந்த ரெக்கார்ட் முடிவுக்கு வந்துவிடுமோ என்று இந்திய ரசிகர்கள் அஞ்சுகின்றனர். அதேபோல் அந்த ரெக்கார்ட் உடைக்கப்படுமா? என்ற ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் இலங்கை ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் மரத்தடியில் தூங்கிய பரிதாபம்!
Ind Vs Sri

கடந்த 27 ஆண்டுக்காலமாக இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது என்பது நம் தரப்பினருக்கு மிகப்பெரிய சாதனை. ஆனால், இலங்கை அணிக்கு அது சோதனை. இப்படியிருக்க இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று சோதனையை சாதனையாக்குமா? என்பதுதான் உலகநாடுகளின் எதிர்பார்ப்பு.

இன்று போட்டி நடைபெறும் இடத்தில் மழை பெரிதளவு இருக்காது என்பதால், போட்டி ரத்தாகாது என்பதில் சந்தேகமேயில்லை. இந்திய அணி சமன் செய்து தொடரை முடித்தால், எந்த பாதிப்பும் இல்லை. இல்லையெனில், வீரர்களுக்கு ஒன்றுமில்லை, கம்பீரின் பயிற்சிக்குத்தான் கேள்வி எழுப்பப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com