steve smith record : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர் புதிய சாதனை படைத்துளளார்.
தற்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து நேற்று 2வது டெஸ்ட் போட்டி துவங்கியது. முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை துவக்கிய நிலையில், முதல்நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களைக் குவித்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இதுவரை 174 போட்டிகளில் விளையாடி, அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் 2ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
172 போட்டிகளில் விளையாடி 9000 ரன்களைக் கடந்து இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா முதலிடத்திலும், 176 போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் 3வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா, ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் இருவரும் தலா 177 போட்டிகளில் விளையாடி 4வது இடத்திலும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.