ட்விட்டரில் விமர்சித்த சுப்மன் கில்! 115% அபராதம் விதித்த ஐசிசி!

ட்விட்டரில் விமர்சித்த சுப்மன் கில்! 115% அபராதம் விதித்த ஐசிசி!

உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது நடுவரின் தீர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்ததற்காக சுப்மன் கில் மீது ஐசிசி 15% அபராதம் விதித்துளளதையடுத்து, சுப்மன் கில்லால் 115% அபராதம் விதிக்க வேண்டியுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2வது இன்னிங்சில் சுப்மன் கில் ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை அடிக்க, அதை கேமரூன் க்ரீன் பிடித்த நிலையில், தொலைக்காட்சி நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ, சுப்மன் கில்லின் கேட்ச் பிடிக்கப்பட்டதாக அறிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் பெரிய பேசுபொருளாகவும் மாறியது.

இதையடுத்து, சுப்மன் கில் தனது ட்விட்டர் பக்கத்தில் மூன்றாவது நடுவரின் முடிவை விமர்சனம் செய்யும்விதமாக பதிவு இட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நடுவரின் முடிவை விமர்சனம் செய்யும்விதமாக பதிவிட்ட சுப்மன் கில்லுக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது.

அதேபோல், போட்டியில் இந்தியா இலக்கை விட ஐந்து ஓவர்கள் குறைவாக பந்து வீசியதாகவும், ஆஸ்திரேலியா நான்கு ஓவர்கள் குறைவாக பந்து வீசியதாகவும் ஐசிசியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக ஒரு ஓவருக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் வீதம், இந்திய அணிக்கு 100% அபராதமும், ஆஸ்திரேலிய அணிக்கு 80% அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, சுப்மன் கில்லால் 15% அபராதத்துடன் 115% அபராதம் கட்ட வேண்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com