"இடைவிடாத முயற்சி நிச்சயமாக வெற்றியைத் தரும்" - நம்பிக்கை ஊட்டும் கிரிக்கெட் வீரரின் வெற்றிக் கதை!

"இடைவிடாத முயற்சி நிச்சயமாக வெற்றியைத் தரும்" - நம்பிக்கை ஊட்டும் கிரிக்கெட் வீரரின் வெற்றிக் கதை!
Published on

வேகமாக நகரும் இன்றைய காலகட்டத்தில் விளையாட்டுதான் பலருக்கும் பொழுதுபோக்காக உள்ளது. ஆனால், சிலருக்கு இதே விளையாட்டுதான் வாழ்க்கையாகவும் இருக்கிறது. அவ்வகையில், பல விளையாட்டுகளில் பல வீரர்கள் சாதித்துள்ளனர். எந்த ஒரு வீரரும் சாதிக்க வேண்டுமானால், முதலில் அவர்களுக்குத் தேவை ஒரு வாய்ப்பு. வாய்ப்பு எனும் வரப்பிரசாதம் கிடைத்தால்தானே, தன்னை நிரூபித்துக் காட்ட முடியும். சிலருக்கு அவர்களுக்கான வாய்ப்பு மிக எளிதாக கிடைத்துவிடும். ஆனால், ஒருசிலருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவிற்கு முயற்சி செய்தும் அந்த வாய்ப்பு கிடைக்காது.

ஆனால், முயற்சிக்கு முட்டுக்கட்டை போடாமல் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தால் எப்படியும் ஒரு நாள் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நிரூபித்தவர்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரரான பிரவின் விஜய் தாம்பே.

விளையாட்டில் இருந்து பலரும் ஓய்வு பெறும் வயதில்தான் பிரவின் விஜய் தாம்பேவுக்கு முதல் வாய்ப்பே கிடைத்தது. அவரின் இடைவிடாத நீண்டதொரு முயற்சிக்கு கிடைத்த பரிசுதான், 41 வயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு. 41 வயதில் இவர் விளையாட வந்ததும் பலரும் இவரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆனால், அந்த வயதிலும் இளவயது வீரரைப்போல் செயல்பட்ட விதம், காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது; மெய் சிலிர்க்க வைத்தது. இருப்பினும், இந்த நிலைக்கு வருவதற்கு அவரின் அயராத உழைப்பும், தொடர் முயற்சியுமே காரணம்.

மும்பையில் பிறந்த தாம்பே, முதலில் வேகப்பந்து வீச்சாளராகத்தான் விளையாடத் தொடங்கினார். ஆனால், இவரது மணிக்கட்டைப் பார்த்த பயிற்சியாளர் அஜய் கடம், இவரை சுழல் பந்து வீச்சாளராக மாற்றினார். அதுவரையில், மும்பை கிளப் அணிக்காக விளையாடி வந்தவர், ஒருபுறம் வேலைக்கும் சென்று, தன் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டார். பலரும் இந்த வயதில் கிரிக்கெட் தேவையா உனக்கு என கிண்டல் செய்தாலும், எதையும் கண்டுகொள்ளாத தாம்பே, தொடர் பயிற்சியினை மேற்கொண்டு வந்தார்.

இதையும் படியுங்கள்:
IPL வெற்றிக்கும், தோல்விக்கும் இடையில் நடைபெறுவது என்ன?
"இடைவிடாத முயற்சி நிச்சயமாக வெற்றியைத் தரும்" - நம்பிக்கை ஊட்டும் கிரிக்கெட் வீரரின் வெற்றிக் கதை!

ருமுறை இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இவரது பந்து வீச்சைக் கண்டு, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் தேர்வு செய்தார். அப்போது, தன்னை விட பெரிய உத்வேகம் பெற்றவர் ப்ரவீன் தாம்பே என டிராவிட் இவரைப் பாராட்டினார். அதுவரையில் ஒரு தொழில்முறை கிரிக்கெட்டில்கூட விளையாடாத தாம்பே, 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக முதன்முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பந்து வீசினார். அவரின் பல ஆண்டு கால முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது அன்றுதான். தாமதமான வெற்றிதான் என்றாலும், இடைவிடாத முயற்சி நிச்சயமாக வெற்றியைத் தரும் என்பதை இந்த உலகிற்கு ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் தாம்பே!

 ஒருவன் தன் இலக்கை அடைய நினைத்தால், எதை வேண்டுமானாலும் விட்டு விடலாம். ஆனால், எதற்காகவும் முயற்சியை விடக்கூடாது என உலகிற்கு உணர்த்திய வீரர்தான் பிரவின் விஜய் தாம்பே. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com