
ஐசிசி ஆடவருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடருக்கு பின்னர் நவம்பர் 23ம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் டிசம்பர் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் பங்குபெறாத இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆஸ்திரேலியா உள்ள டி20 தொடரில் பங்குப்பெற அதிக வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலககோப்பை முடிந்த கையோடு டி20 போட்டிகளுக்கான உலககோப்பை தொடர் ஆரம்பமாக உள்ளதால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த டி20 தொடருக்காக தான் ஹார்திக் பாண்டியாவை அவ்வளவாக விளையாட விடாமல் சில போட்டிகள் மட்டுமே விளையாட வைத்தனர் என கூறப்படுகிறது.
அதேபோல் சூர்யகுமார் யாதவ்,ருத்ராஜ் போன்ற வீரர்களையும் டி20 தொடருக்காக உலக கோப்பை தொடரில் விளையாட விடாமல் வைத்திருந்தனர். அப்படி இருந்தும் கூட ஹார்திக் பாண்டிய பவுலிங் செய்யும் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். இந்த டி20 போட்டியில் ஹார்திக் பாண்டியா கேப்டன்ஷிப் செய்வார் என்று இருந்த நிலையில் காயம் காரணமாக இன்னும் மூன்று மாதம் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக ருத்துராஜ் தேர்ந்தெடுக்கப்படுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்ருக்கு பதிலாக விவிஎஸ் லக்க்ஷமன் இந்த டி20 தொடரில் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.