சச்சினை மிஞ்சிய சூர்யகுமார் யாதவ்... உலக சாதனை படைத்து அசத்தல்!

SKY
SKY
Published on

நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது அபார ஆட்டத்தின் மூலம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை, கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த இன்னிங்ஸ் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் (14 ஆட்டங்கள்) குறைந்தது 25 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர், தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா 13 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 25 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

மேலும், இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த ரன்கள் மூலம், ஒரு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர், 2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் தற்போது 640 ரன்களுக்கும் மேல் குவித்து, சச்சினின் 15 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
நாய் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளும் பிரச்னைகளும்!
SKY

சூர்யகுமார் யாதவின் இந்த ஆட்டம், அவரது அதிரடி ஆட்டத்திறன் மற்றும் நிலைத்தன்மைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் "மிஸ்டர் 360" என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஒரு முக்கிய வீரராகத் திகழ்கிறார். அவரது இந்த சாதனைகள், வரும் காலங்களில் இன்னும் பல சாதனைகளை அவர் படைப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இது இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com