விம்பிள்டன் அரையிறுதியில் ஸ்விடோலினா, ஜோகோவிச்!

விம்பிள்டன் அரையிறுதியில் ஸ்விடோலினா, ஜோகோவிச்!
Published on

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் நாட்டு வீராங்கனையான எலினா ஸ்விடோலினா, உலகின் நெம்பர் 1 வீராங்கனையும் நான்கு முறை பட்டம் வென்ற வருமான இகா ஸ்வியாடெக்கை 7-5, 6-7 (5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஒரு குழந்தைக்கு தாயாகி மருத்துவ விடுப்பிலிருந்து திரும்பி 3 மாதங்களே இருக்கும் நிலையில் விம்பிள்டன் போட்டியில் ஆக்ரோஷத்துடன் ஆடி விம்பிள்டன்னில் முன்னேறி வருகிறார். அரை இறுதியில் ஸ்விடோலினா, செக் குடியரசின் மார்கெட வான்ட்ரோசோவாவை சந்திக்கிறார்.

போட்டி தர வரிசையில் நான்காவது இடத்தில் இரு4-6 ந்த அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா காலிறுதியில் செக் குடியரசின் மார்கெட வான்ட்ரோசோவாவிடம் 4-6, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

முதல் செட்டை ஸ்விடோலினா 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்தார். எனினும் அடுத்த செட்டில் ஸ்வியாடெக், 7-6 என்ற செட் கணக்கில் வென்று பதிலடி கொடுத்தார். ஆனால், ஸ்விடோலினா ஆக்ரோஷத்துடன் விளையாடி 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் ஸ்விடோலினா 7-5, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச், ஆண்ட்ரே ருப்லேவை 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதியில் நுழைந்தார். இவர் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னரை சந்திப்பார்.

முன்னதாக மற்றொரு காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரோமன் சஃபியுல்லின்னை 6-4, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.ஆடவர் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ரோஹன் போபண்ணா (இந்தியா), மாத்யூ எப்டன் (ஆஸ்திரேலியா) ஜோடி டேவிட் பெல் (நெதர்லாந்து), ரீஸ் ஸ்டால்டர் (அமெரிக்கா) ஜோடியை 7-5, 4-6, 7-6 என்ற செட்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com