சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார் கே.எல். ராகுல்!

சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார் கே.எல். ராகுல்!

ஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் கே.எல். ராகுல் நாக்பூரில் உள்ள சாய்பாபா கோயிலிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்றிருந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். தனது திருமணம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவில்லை. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கே.எல். ராகுலுக்கும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள, கே.எல் ராகுல். நாக்பூர் வந்து அணியினருடன் பயிற்சியை மேற்கொண்டார்.

இந்நிலையில், நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற சாய் பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் 22, 23, 10 மற்றும் 2 என்று குறைந்த ரன்களே எடுத்திருந்தார். எனினும், அவர் இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ளார். ஆகவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடி சதம் அடிக்க வேண்டும், இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று மனதார வேண்டி சாய் பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

முன்னதாக விராட் கோலியும் தனது குடும்பத்தினரோடு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சென்று அங்கு சாமி தரிசனம் செய்திருக்கிறார். தொடர்ந்து மகள் மற்றும் மனைவியோடு டிரெக்கிங் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் வைரலானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com