மாரடைப்பு அறிகுறிகள்.. கவனிக்காமல் இருப்பதே தவறு!

மாரடைப்பு அறிகுறிகள்.. கவனிக்காமல் இருப்பதே தவறு!

சமீப காலமாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. சிறு குழந்தைகளுக்கு கூட மாரடைப்பு வருவதை நம்மால் செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. இதற்கெல்லாம் இப்போதுள்ள உணவு முறை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் இன்றைய லைப்ஸ்டையில் ஆகிய முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. பொதுவாக மாரடைப்பு என்பது ஒருவருக்கு உடனடியாக வந்துவிடாது. ஏற்கனவே நமக்கு சில அறிகுறிகளை காட்டும். நாம் தான் அது வாயு வலி என நினைத்து அஜாக்கிரதையாக விட்டுவிடுகிறோம்.

ஆனால் சில அறிகுறிகள் முன்பே தென்படும். அவை என்ன என்பதை பார்க்கலாம்.

கார்டியோவாஸ்குலர் நோய்கள் எனப்படும் CVDs உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதற்குப் பலியாகி வருவதாகப் மருத்துவ ஆய்வறிக்கைகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஐந்தில் நான்கு இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நிகழ்கின்றன. சைலன்ட் கில்லர் எனப்படும் மாரடைப்பு, முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்தது.தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு ஆண்களுக்கு ஏற்படுவதை விட சில வேறுபட்ட அறிகுறிகளை கொண்டிருக்க கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஹார்ட் அட்டாக் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாரடைப்பு ஏற்ப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சுமார் 1 மாதத்திற்கு முன்பே சில அசௌகரியமான உடல் ரீதியிலான உணர்வுகளை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக அவர்களுக்கு இதுநாள்வரை இல்லாத அதீத சோர்வு, தூக்கம் என்பது பிரச்சனை இல்லாமல் இருந்து திடீரென தூங்குவதில் சிக்கல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் அது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் இதயநோய் மருத்துவர்கள். இதுபோன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் துவங்கிய உடனே நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது மற்றும் உரியப் பரிசோதனைகளை மேற்கொள்வது ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்கப் உதவும்.

இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் ஒவ்வொருவரும் கட்டாயம் தினமும் தவறாமல் சுமார் அரை மணிநேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, சரியான நேரத்தில் தூங்கிச் சரியான நேரத்தில் எழுவது, புகை & மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்ப்பது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயங்களைக் குறைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com