T20 உலக கோப்பை 2024 - இது வரையில்..!

T20 World Cup 2024
T20 World Cup 2024

Cake walk (மிகவும் சுலபம்) என்று எதிர்பார்த்த மேட்ச்சுக்கள் எதிரணியினரை தண்ணீர் குடிக்க வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது வரையில் நடைப் பெற்ற 15 மேட்ச்சுக்களில் , வித்தியாசமான முடிவுகளை காண முடிந்தது.

புதிதாக உயர் மட்ட கிரிக்கெட் போட்டி ஆட்டங்களில் பங்கு பெறும் அணிகளை சரிவர கணிக்காதது, முடிவுகளில் அதிர்ச்சிகளை அளித்துள்ளன.

முதல் ஆட்டத்திலேயே கனடா, அமெரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட 200 ரன்களை தொட்டனர். அமெரிக்க அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றனர். 11 வது மேட்ச் பரபரப்பான ரிசல்டை கொடுத்தது. அனுபவம் மிக்க பாகிஸ்தான் அணி அமெரிக்க அணிக்கு எதிராக மிகவும் சுலபமாக வெல்லும் என்று எல்லோராலும் எதிர் பார்க்கப் பட்டது. 159 ரன்கள் ஸ்கோரை இரு அணிகளும் அடைய, மேட்ச் டையான (Tie) நிலையில் தாண்டி விளையாட ஒரு ஓவர் முடிவை அறிவிக்கப்பட்டது, அமெரிக்க அணி வென்று சாதனை புரிந்தது.

14 வது மேட்சில் அடுத்த அதிர்வு ஏற்பட்டது:

நியூஜிலாந்து அணியால் ஆப்கானிஸ்தான் அணியின் 159 ரன்கள் ஸ்கோரை நெருங்க கூட முடியவில்லை, அவர்கள் எடுத்தது 75. 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் அணியின் வென்றது.

ஸ்ரீலங்கா அணி இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி.

இந்திய அணி ஒரு வெற்றி. இனிதான் இருக்கு முக்கிய ஆட்டங்களில் எப்படி ஆடப் போகிறார்கள் என்று.

மற்ற ஆட்டங்கள் விரு விருப்பாக இருந்தன.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க அணியில் கலக்கும் சவுரப் நெட்ரவல்கர் யார் தெரியுமா?
T20 World Cup 2024

புள்ளி பட்டியலில் அமெரிக்கா (4) ஸ்காட்லாந்து (3) ஆப்கானிஸ்தான் (4) தென் ஆப்பிரிக்கா (2) என்ற நிலையில், ஒவ்வொரு குரூ ப்பிலும் முதல் இடத்திலுள்ளன.

ஆட வேண்டிய மேட்ச்சுக்கள் வரிசையாக உள்ளன.

பாகிஸ்தான் , நியூஜிலாந்து, ஸ்ரீ லங்கா அணிகள் தர வரிசையில் ஒரு பாயிண்ட் கூட பெறவில்லை.

இது வரையில் நடந்ததில் 2 மேட்ச்சுக்களில், தலா 21 ஓவர்கள் ஆட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

புதிய அணிகளும் அனுபவ அணிகளுக்கு சில மேட்ச்சுக்களில் கடினமான சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளன. அதிரடி ஆட்டங்கள், அசத்தலான பீல்டிங், பவுலிங் வெளிப்படுத்தப் பட்டன. எதிர் வரும் மேட்ச்சுகளில் அதி வேகம் காணப்படும். அடுத்த கட்டங்களில் எதிர் பார்க்காத அணிகளும் பயணம் செய்ய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. விரு விருப்பிற்கு குறைவு இருக்காது என்று நம்பலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com