T20 உலக கோப்பை கிரிக்கெட்! இனி எப்படி இருக்கும்..!

T20 Worldcup
T20 Worldcup

இன்று ( 22.06.24 ) இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மேட்சை தவிர்த்து நடைப்பெற போகும் 5 மேட்சுகளும் முக்கியமான செய்திகளை தரும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் எதிர் பார்ப்புகளுடன் காத்து இருக்கின்றனர்.

கடைசி 8 சூப்பர் ஸ்டேஜ் தகுதி சுற்றில் இடம் பெற்ற இந்த 8 அணிகள் இந்த போட்டியில் நன்றாக விளையாடியுள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது. இருந்தும் இரண்டு அணிகள் மட்டும் இறுதி போட்டியில் சந்தித்து அவற்றில் ஒன்று கோப்பையை வெல்லப் போகின்றது.

புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுக்கள் அணிகள் ஒவ்வொரு குரூப்பிலும் முறையே முதல் இரண்டு இடங்களில்
இருக்கின்றன.

சூப்பர் 8 தகுதி சுற்றில் இது வரையில் நடைப் பெற்ற ஆட்டங்களின் முடிவுகளை உற்று நோக்கும் பொழுது, புலப்படுவது:

தென் ஆப்பிரிக்கா அணி 18 மற்றும் 7 ரன்கள் வித்தியாசங்களில் முறையே யுஎஸ்ஏ மற்றும் இங்கிலாந்து அணிகளை வென்றுள்ளன. இவர்கள் மேற்கு இந்திய தீவுக்கள் அணியை எதிர் கொள்ள வேண்டும். இது வரையில் எந்த முக்கிய சர்வதேச போட்டியிலும் கோப்பை வெல்லாத தென் ஆப்பிரிக்கா அணிக்கு, இந்த போட்டியில், இது வரையில் வெளிப்படுத்தி உள்ள புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் அவர்கள் குரூப்பில் முதலிடத்தில் இருக்கும் அவர்களுக்கு இது ஒரு அறிய சந்தர்ப்பம். நழுவ விடாமல் எப்படியாவது பாடுபட்டு வெல்ல எல்லா வித முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்று நம்பலாம்.

அதே சமயம் மேற்கு இந்திய தீவுக்கள் அணி, தங்கள் மண்ணில் போப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அதிரடியுடனும், ஆக்ரோஷத்துடனும் ஆடுவார்கள். இந்த இரண்டு அணிகளில் ஒன்று வென்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இதையும் படியுங்கள்:
I Have the Streets: A Kutti Cricket Story! அஸ்வினின் அனுபவங்களைப் பேசும் புத்தகம்!
T20 Worldcup

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வி தழுவிய போதும், யுஎஸ்ஏ டீம்மை 9 விக்கெட் வித்தியாசத்தில் அதுவும் பல ஓவர்கள் மீதி இருக்க வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அணி எதிர் வரும் யுஎஸ்ஏ அணியை மிக அதிக வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்ட நிலையில் உள்ளனர். அது அவ்வளவு சுலபம் இல்லை.

ஆஸ்திரேலிய , இந்திய அணிகள் ஆட்டம் , மிக்க எதிர் பார்ப்பை உண்டு செய்துள்ளது. இரண்டு அணிகளும் வலிமையானவை.

ஆப்கானிஸ்தான், வங்க தேசம் அணிகள் மீதி இருக்கும் ஆட்டங்களில் எதிர்பாரத அதிர்ச்சிகள் முடிவுகளில் அளிக்க கூடிய திறமை பெற்றவர்கள்.

அமெரிக்க அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.

இது வரையில் ஆடிய ஆட்டங்கள் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரிலோயா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுக்கள் அணிகள் செமிபைனல் ஆட்டங்களில் விளையாட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com