டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாற்காலிக செயற்கை ஆடுகளம்!

Temporary artificial pitch in T20 World Cup cricket match!
Temporary artificial pitch in T20 World Cup cricket match!

அமெரிக்காவில் டி20 உலக கோப்பை போட்டி நடைபெறும் இடத்தில் அடி ய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தின் காப்பாளர் டாமியான் ஹோக் தயாரித்த தாற்காலிக ஆடுகளம் நிறுவப்பட உள்ளன. மேலும் வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள போட்டியைக் காண 34,000 பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் தாற்காலிக கேலரிகளையும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் அமைக்க உள்ளது.

மன்ஹட்டனுக்கு கிழக்கே 25 கி.மீ. தொலைவில் உள்ள நஸ்ஸாவ் என்னுமிடத்தில் இந்த மைதானம் அமைந்துள்ளது இங்கு அமைக்கப்படும் தாற்காலிக கேலரிகளில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஸ்டேடியங்களைவிட அதிகம்பேர் அமர்ந்து போட்டியை காண முடியும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் இயக்குநருமான கிறிஸ் டெட்லி தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் பயன்படுத்தப்படும். இந்த ஆடுகளத்தை அடிலெய்டு ஒவல் மைதான காப்பாளரும் ஆடுகளம் தயாரிப்பதில் நிபுணருமான டாமியன் ஹோக் தயாரித்துள்ளார்.

செயற்கை ஆடுகள் அவரது மேற்பார்வையில் ப்ளோரிடாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆடுகள மைதானத்தின் மேற்பரப்பும் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது. வடிகால் வசதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார் கிறிஸ் டெட்லி.

மைதானத்தில் அனைத்து கட்டுமானங்களும தாற்காலிகமானவைதான். ஆடுகளம், புல்தரை மைதானம், ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் கேலரிகள் அனைத்தும் தாற்காலிமானவைதான். இவற்றை தயாரிப்பதற்கான கருவிகள் லாஸ்வேகாஸிலிருந்து வரவழைக்கப்ப்ட்டு நியூயார்க் கொண்டு செல்லப்படுகின்றன என்றார்.

அமெரிக்காவில் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். மேலும் கிரிக்கெட் ஒளிபரப்பிலும் மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மைதானத்தை சமன் செய்யும் பணி தொடங்கும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மின்னணு பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான் எதிர்ப்பு!
Temporary artificial pitch in T20 World Cup cricket match!

பிப்ரவரியில் கட்டுமானப் பணிகள் தொடங்கி மே மாதத்திற்குள் அனைத்து பணிகளும் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும். அதன் பிறகு செயற்கை ஆடுகளம் ப்ளோரிடாவிலிருந்து லாரி மூலம் கொண்டுவரப்பட்டு நிறுவப்படும். அதே நேரத்தில் செயற்கை புல்தள மைதானமும் தயாராகிவிடும். பின்னர் தாற்காலிக கேலரிகள் நிறுவப்படும். இது மும்பை வான்கடே ஸ்டேடியம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள கேலரிகளைவிட மிகப்பெரியதாக இருக்கும் என்றார் டெட்லி.

நியூயார்க் மைதானம் இன்னும் வெளிப்படையாக சோதித்து பார்க்கப்படவில்லை. உலக கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக அங்கு பயிற்சிப் போட்டிகள் நடத்தப்படும் என்றார் டெட்லி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com