டி20 உலக கோப்பை : மழையால் போட்டி ரத்தானால் என்னாகும் இந்தியாவின் நிலைமை?

டி20 உலக கோப்பை : மழையால் போட்டி ரத்தானால் என்னாகும் இந்தியாவின் நிலைமை?

தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் 1.30 மணிக்கு இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக களமிறங்கவுள்ளார். அதேபோல், தீபக் ஹூடாவிற்கு பதில் அக்ஷர் படேலை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக ஆடிவருவது அணிக்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. முக்கியமாக பார்க்கப்படுவது ஃபீல்டிங். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங்கில் சொதப்பியது அனைவரும் அறிந்த ஒன்று. அதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புவார்கள். ஒருவேளை இந்த போட்டியில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை அறிவித்தாலும் இந்த போட்டியானது ஓவரைக் குறைத்தாவது நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்த போட்டியில் சிக்கல் ஏற்பட்டால் ஜிம்பாப்வே அணியுடனான கடைசி போட்டி, இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்பதுபோல் அமைந்துவிடும். அதனால் வரப்போகும் இரண்டு போட்டியுமே நல்லபடியாக நடக்க வேண்டும். இந்தியாவும் ஜெயித்தாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com