தென் கொரியாவில் இன்று தொடங்கிய ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பாக முதல் பதக்கத்தை வென்றுத் தந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த செர்வின் செபாஸ்டியன்.
தென் கொரியாவின் குமியில், 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் இன்று ஆரம்பமானது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இத்தொடருக்காக 61 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்திய அணியில் அவினாஷ் சாபிள், பிரவீன் சித்ரவேல், அன்னு ரானி போன்ற ஒலிம்பிக், ஆசிய பதக்கம் வென்றவர்கள், தேசிய சாம்பியன்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த தொடரின் முதல் போட்டியாக ஆடவருக்கான 20 மீட்டர் தடகள போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் மற்றும் அமித் ஆகிய இரு இந்திய வீரர்கள் பங்கேற்றனர். அமித் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
உள்ளூர் நேரப்படி காலை 4.30க்கு இப்போட்டி தொடங்கப்பட்டது. 1 மணி நேரம் 21 நிமிடங்கள் 13 நொடிகளில் இலக்கை அடைந்த செர்வின் செபஸ்டின் வெண்கலம் வென்றார். சீன வீரர் வாங் முதல் இடமும், ஜப்பானின் கெண்டோ 2ம் இடமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீரரான அமித், 5ஆம் இடம் பெற்றார். இப்போட்டியில் மொத்தம் 15 வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செர்வின் செபாஸ்டியனின் இந்த வெற்றி, தமிழகத்தில் தடகள விளையாட்டிற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அவரது இந்த சாதனை, பல இளம் வீரர்களுக்கு, கனவு காணவும், அதனை அடையவும் தூண்டுகோலாக அமையும். அவரது இந்த பயணம், விடாமுயற்சியும், தியாகமும் இருந்தால், எந்த உயரத்தையும் அடையலாம் என்பதை உலகிற்கு உணர்த்துகிறது. தமிழக அரசு மற்றும் விளையாட்டு அமைப்புகள், செர்வின் செபாஸ்டியன் போன்ற திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும். இதன் மூலம், எதிர்காலத்தில் இன்னும் பல செர்வின் செபாஸ்டியன்கள் உருவாகி, இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.