கிரிக்கெட் தொடரில் வாயில் கட்டுடன் களமிறங்கிய தமிழக வீரர்! என்ன நடந்தது தெரியுமா?

Baba Indrajith
Baba Indrajith
Published on

விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டியில் ஹரியானா மற்றும் தமிழ்நாடு நேருக்கு நேர் மோதின. இப்போட்டியின்போது தமிழக வீரர் பாபா இந்திரஜித் வாயில் கட்டுப்போட்டுக்கொண்டு விளையாடியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டி குஜராத்தில் உள்ள சௌராட்டிரா சங்க கிரிக்கெட் அரங்கம் மைதானத்தில் ஹரியானா மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ஹரியானா அணி பேட்டிங் செய்ய முடிவுசெய்தது. ஹரியானா அணி 7 விக்கெட்டுகளில் 293 ரன்கள் குவித்தது. ஹரியானா அணியில் ராணா 116 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதேபோல் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகள் கொடுத்து ஹரியானா அணியின் ரன் ரேட் குறைவதற்கு காரணமானார். அதன்பின் பேட்டிங் செய்த தமிழக அணி 47.1 ஓவர்களிலேயே 230 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி முன்னேற முடியவில்லை. ஹரியானா அணி முதன்முதலாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

தமிழக அணி சார்பில் களமிறங்கிய பாபா இந்திரஜித் வாயில் கட்டுப்போட்டுக்கொண்டு மைதானத்திற்கு வந்தார். கட்டுக்குமேல் முகத்தில் ஹெல்மெட் போட்டுதான் பாபா விளையாடினார். இருப்பினும் அவர் 71 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்தினார்.

முதலில் வாயில் கட்டுப்போட்டுக் கொண்டு விளையாடியதே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதிலும் அவர் வெறித்தனமாக விளையாடியது ரசிகர்களைக் கூடுதல் ஆச்சரியத்தில் தள்ளியது. பாபா வாயில் கட்டுப்போட்டுக்கொண்டு விளையாடியது பலரிடையே பெரும் குழப்பமாக இருந்தது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்தார். அதில் பாபா வாயில் கட்டுப் போட்டுக்கொண்டு விளையாடியதன் காரணத்தைக் கூறினார். ஹரியானா பேட்டிங் செய்து முடித்தவுடன் தமிழக வீரர் பாபா குளிக்க சென்றிருக்கிறார். அப்போது கால் தவறி கீழே விழுந்துவிட்டார் பாபா. இதனால் உதட்டில் பெரும் காயம் ஏற்பட்டு நிறைய ரத்தம் வெளியேறியிருக்கிறது. வெளி உதட்டில் மட்டும் அல்லாது உள் உதட்டிலும் அதிகமாக காயம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில் அணியிலிருந்து வெளியேறாத பாபா வாயில் கட்டுப்போட்டு ரத்தத்தை மட்டும் நிறுத்திவிட்டு மைதானத்திற்கு வந்துள்ளார். போட்டி முடிந்த உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகிவுள்ளது.

எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் பாபா இந்திரஜித் போட்டியை விட்டு வெளியேறாமல் தமிழக அணிக்காக விளையாடியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ரத்த வாந்தி எடுத்துவிட்டு கிரிக்கெட் விளையாடிய யுவராஜ் சிங்கை நியாபகப்படுத்துகிறார் பாபா இந்திரஜித்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com