டீ...டீ....டீ... ஓர் உற்சாக பானம்!

டீ...டீ....டீ... ஓர் உற்சாக பானம்!
Published on

டீத்தூள், தண்ணீர், சர்க்கரை, பால் நான்கையும் வைத்துக்கொண்டு நாமும் வேறுபட்ட ருசிகளைப் படைப்போமே!

லைட் டீ:

ரு கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்துக் கொண்டு 1¼ ஸ்பூன் டீத்தூளைப் போட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு அளவான பால், சர்க்கரை சேர்க்க வேண்டும்.

ஸ்ட்ராங் டீ:

மூன்று கப் டீ வேண்டுமானால் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு காஸில் வைக்கவும். பாலைக் காய்ச்சிக் கொள்ளவும். தண்ணீர் கொதிக்கும்போது 2½ டீஸ்பூன் டீத்தூளை அதில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் பாலில் 6 டீஸ்பூன் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கரைந்து நுரை வருமாறு ஆற்றிவிட்டு அதில் டீ டிகாக்ஷனை வடிகட்டி கப்பில் ஊற்றிக் கொடுங்கள்.

துளசி டீ:

டுப்பில் டீத்தூளைக் கொதிக்க வைக்கும்போது நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளையும் சேர்த்தால் டீயும் புதுவித வாசனையாக இருக்கும். ஜலதோஷத்திற்கும் நல்லது.

சுக்கு டீ:

கொதிக்கும் டீயில் சிறிதளவு சுக்குப் பொடியைச் சேர்க்க வேண்டியதுதான். இது ஜீரணத்துக்கும் நல்லது.

ரோஸ் டீ:

ரோஜா இதழ்களை நிழலில் நன்றாகக் காயவைத்து எடுத்து வைத்துக்கொண்டால் அதை டீ டிகாக் ஷன் தயாரிக்கும்பொழுது நான்கு இதழ்கள் சேர்த்துக் கொண்டால் மணம் நிறைந்த ரோஸ் டீ தயார்.

கோகோ டீ:

டி டிகாக் ஷன் கொதிக்கும்பொழுது ¼ ஸ்பூன் கோகோ பொடியைச் சேர்த்தால் ருசிமிக்க கோக்கோ டீ ரெடி. குழந்தைகளுக்கு இந்த ருசி மிகவும் பிடிக்கும்.

எலுமிச்சம்பழம் சேர்த்த கறுப்பு டீ:

யிற்றுப் போக்கா? அதற்கும் டீயில் வைத்தியம் செய்யலாம். டீ டிகாக் ஷன் தயாரித்துக்கொண்டு அதில் ½ மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சிறிது சர்க்கரை சேர்த்துப் பருகினால் வயிற்றுப் போக்கு நொடியில் நின்றுவிடாதா?

இந்த டீயை நன்றாக ஆற்றிச் சிறிது ஐஸ் கட்டிகளைச் சேர்த்தால் கோடை வெயிலுக்கு அருமையான குளிர்பானமாக் கொடுக்கலாமே!

மலாய் ஏலக்காய் டீ:

வீட்டில் ஸ்வீட் செய்யும்போது ஏலக்காய்ப் பொடி உபயோகிக்கிறோம் இல்லையா? அதன் தோல்களை வீணாக்காமல் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். டீ டிகாக் ஷன் தயாரிக்கும்போது 4 ஏலக்காய் தோல்களையோ அல்லது சிறிது ஏலக்காய் போடியோ போட்டு சுண்டக் காய்ச்சிய பாலையும் சர்க்கரையையும் சேர்த்தால் மலாய் ஏலக்காய் டீ தயார்.

மசாலா டீ:

சுக்கு 1 துண்டு, மிளகு 20, ஜாதிக்காய் ¼, ஏலக்காய் 5, லவங்கம், ஜாதிபத்திரி 1 துண்டு, இவைகளை லேசாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்தால், டீ டிகாக்ஷன் தயாரிக்கும்போது ¼ ஸ்பூன் மசாலாவைச் சேர்த்து எல்லோரையும் அசத்த வேண்டியதுதான்.

டீ பிஸ்கஸ்:

செம்பருத்திப் பூவை நன்றாகக் காயவைத்து இதழ்களை சுத்தமாக எடுத்து வைத்துக்கொண்டு டீ டிகாக்ஷன் போடும்போது,  இரண்டு இதழ்களைச் சேர்க்க வேண்டியதுதான். டீ பிஸ்கஸ் ரெடி. இதயத்திற்கும் வலுவைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com