
உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது ஐபிஎல் 2023ல் பங்கேற்பதற்காக வலை பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அது சம்பந்தமான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைசிறந்த கேப்டன், விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் என அனைத்திலும் ஆதிக்கத்தை செலுத்தி முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் ஆகஸ்ட் மாதம் 2020ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருநது தனது ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். ஐபிஎல்-ஐ பொறுத்தவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக அன்று முதல் இன்று வரை தோனியே தலைமை வகித்து அணியை வழி நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது 2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்வதற்காக தோனி ஆயத்தமாகி வருகிறார். அதையடுத்து, எம்.எஸ்.தோனி நேற்று வலை பயிற்சியில் பேட்டிங் செய்யும்படியான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...