சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் அர்ஜென்டினா அணி முதலிடம்!

சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் அர்ஜென்டினா அணி முதலிடம்!
Published on

சர்வதேச கால்பந்து சங்க அணிகளின் தரவரிசை பட்டியலில் அர்ஜென்டினா அணி முதலிடம் பிடித்தது. அர்ஜென்டினா 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடம் பிடித்ததுள்ளது. 1978, 1986ல் சாதித்த இந்த அணி, 36 ஆண்டுக்குப் பின் மீண்டும் உலக கோப்பை கைப்பற்றியதே இதற்கு முக்கிய காரணம்.

சர்வதேச கால்பந்து சங்கம், அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் அர்ஜென்டினா அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 36 ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு சமீபத்தில் நட்புறவு ஆட்டங்களில் பனாமா, குராசாவ் ஆகிய நாடுகளை அர்ஜென்டினா அணி தோற்கடித்தது. இதன் மூலம் ஒரு இடம் முன்னேறி, 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அர்ஜென்டினா முதலிடம் பிடித்ததுள்ளது.

முதலிடத்தில் இருந்த 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, இரு இடம் சறுக்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த மாதம் மொராக்கோவுக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் 1-2 என்ற புள்ளி கணக்கில் பிரேசில் அணி தோற்றது குறிப்பிடத் தக்கது.

பிரான்ஸ் ஒரு இடம் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது. பெல்ஜியம் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 5-வது இடத்திலும் நீடிக்கிறது. கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் 9-வது இடம் வகிக்கிறது.அண்மையில் மணிப்பூரில் நடந்த முத்தரப்பு கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி 5 இடங்கள் உயர்ந்து 101-வது இடத்தை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com