குஜராத் அணியை பழி தீர்த்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி!

குஜராத் அணியை பழி தீர்த்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி!

டப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து, பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி மற்றும் குஜராத் டைட்டன் அணிக்கு இடையே மாலை 7.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட வந்தனர் கான்வே மற்றும் ருதுராஜ்.  

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது இந்த ஜோடி. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆட வந்த ஷிவம் டூபே அதிர்ச்சி தரும் விதமாக 1 ரன்கள் எடுத்து நூர் அகமது பந்து வீச்சில் அவுட் ஆனார். அதிரடி ஆட்டக்காரர் கான்வே 40 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த சிஎஸ்கே வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். கேப்டன் மகேந்திர சிங் தோனி 2 பந்துகளில் 1 ரன் எடுத்து மொஹித் ஷர்மா பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினர் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமன் சாஹா மற்றும் சுப்மன் கில். தொடக்கத்தில் இருந்தே தடுமாறியபடி ஆடிய சாஹா, தீபக் சாஹர் பந்து வீச்சில் பதிரானாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த குஜராத் அணியின் கேப்டன் ஹிர்திக் பாண்டியா 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து தீக் ஷனா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஆட வந்தார் ஷானகா. இவர் 16 பந்துகளை சந்தித்து 17 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் தீக் ஷனாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து ஆட வந்தார் மில்லர். இவர் 6 பந்துகளைச் சந்தித்து 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவின் சுழல் பந்தில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ஆட வந்தார் விஜய் சங்கர். ஆட்டம் முதல் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 37 பந்துகளைச் சந்தித்து 42 ரன்கள் எடுத்து, தீபக் சஹர் பந்து வீச்சில் ஆவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆட வந்தார் தெவாட்டியா. இவர் 5 பந்துகளைச் சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து தீக் ஷனா பந்து வீச்சில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஆட வந்தார் அதிரடி ஆட்டக்காரர் ரஷித் கான். அடுத்ததாக விஜய் சங்கர் பத்து பந்துகளைச் சந்தித்து 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாட்டிய ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனதும் சென்னையின் வெற்றி உறுதியானது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com