மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி!

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி!

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க விழா சென்னை மணப்பாக்கம் அருகே இருக்கும், ‘த்ரோட்டில்’ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில அணிகள் பங்கேற்க உள்ளன. ஆறு லீக் ஆட்டங்கள் மற்றும் ஒரு இறுதிப் போட்டிகள் நடைபெறும் இந்தப் போட்டித் தொடர் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கிரிக்கெட் தொடரின் துவக்க விழாவில் ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட், ராகுல் சரத்குமார், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநர் விக்ரம் ஜாங்கிட், செயலாளர் வீரராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இந்தக் கிரிக்கெட் போட்டி வெற்றிக் கோப்பை மற்றும் தமிழக அணியின் ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியவர்கள், ‘கடந்த 15 வருடமாக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கடுமையாகப் போராடி வருகிறது. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் விளையாட்டை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அனைவரும் இந்த விளையாட்டுக்கு உதவிகளை செய்து இதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று பேசினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com